வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் - நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை - ஆர்பிஐ - Reserve Bank of India
வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் - நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை
RBI/2009-2010/77 ஜூலை 1, 2009 அனைத்து தொடக்கநிலை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளின் முதன்மை நிர்வாக அதிகாரிகளுக்கும் அன்புடையீர், வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் - நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை எண் UBD. BPD (PCB)MC.No.2/09.22.010/2008-2009 ஜூலை 1, 2008 தேதியிட்டதைப் பார்வையிடுக. (ரிசர்வ் வங்கி இணையதளம் www.rbi.org.in ஐப் பார்க்கலாம்). ஜுன் 30, 2009 நாள் வரை வெளியான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் இணைக்கப்பட்டுள்ள தொகுப்பு இந்த தொகுப்புச் சுற்றறிக்கையில் அடங்கியுள்ளன. 2. கிடைக்கப்பெற்றமைக்கான ஒப்புதலை உரிய ரிசர்வ் வங்கியின் பிராந்தியக் கிளைக்கு அனுப்பவும் தங்கள் உண்மையுள்ள A.K. ஹுண்ட் தொகுப்புச் சுற்றறிக்கை வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதியுதவி பொருளடக்கம்
பின்னிணைப்பு....1 பின்னிணைப்பு......... தொகுப்புச் சுற்றறிக்கை வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதியுதவி
2. கடன்பெறத் தகுதியுடையவர்கள் 2.1 நகர கூட்டுறவு வங்கிகள் கீழ்க்கண்ட வகையான கடனாளிகளுக்கு கடன் அளிக்கலாம்.
3.1. பின்வரும் வீட்டுவசதித் திட்டங்களுக்கான முன்னர் குறிப்பிடப்பட்ட பிரிவினர் வங்கிக்கடன் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
4. வீட்டுவசதிக் கடன்களுக்கான கருத்துக்கள் மற்றும் கட்டளைகள் தகுதியான வீட்டுவசதிக் கட்டமைப்புகளுக்கு தகுதியான நபர்களுக்கு நகர கூட்டுறவு வங்கிகள் கடனுதவி அளிக்கும்போது பின்வரும் கருத்துக்களையும் கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 4.1. அதிகபட்ச கடன் தொகை மற்றும் கடனிழப்பீட்டு ஈடு தொகை (Margin)
4.2. வட்டிவிகிதம் இடர்வரவு விகிதம், குடியிருப்பின் அளவு, மற்ற காரணிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் தமது நிர்வாகக் குழுமத்தின் ஒப்புதலோடு வீட்டுவசதிக் கடன்களின் வட்டி விகிதத்தை வங்கிகள் நிர்ணயிக்கலாம். 4.3. அபராத வட்டி விகிதம் விதித்தல் வங்கிகள் தத்தம் நிர்வாகக் குழுமத்தின் ஒப்புதலோடு ஒளிவுமறைவில்லாத தன்மையுடைய கொள்கை முறைமையை வகுத்திடலாம். கடனைத் திருப்பியளிக்கும் தவணைகளில் தாமதம், நிதிஅறிக்கைகள் அளிக்கத் தவறுதல், ஆகிய நேரங்களில் விதிக்கப்படும் அபராத வட்டிவிகிதம் குறித்த கொள்கையை வங்கிகள் வகுத்துக் கொள்ளலாம். ஒளிமறைவில்லாதத் தன்மை, நேர்மையான அணுகுமுறை, கடன் பராமரிப்பில் லாபம், வாடிக்கையாளரின் நியாயமான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய முக்கியமான அனைவரும் ஒப்புக்கொள்ள கூடிய கொள்கைகளைக் கொண்டவையாக வங்கியின் முறைமைகள் அமைந்திட வேண்டும். 4.4. அடமானம் /பிணையம்
4.5.கடனின் கால அளவு
4.6. படிப்படியாக அமைக்கப்பட்ட கால அளவுத் தவணைகள்
4.7. வீட்டுவசதிக் கடனுக்கான மொத்த வரையறை 4.7.1 தமது மொத்த வைப்புநிதிகளில் 15%ஐ நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வீட்டுவசதிக் கடன் அளிக்கவும் மூலதனக் கடன் அளிக்கவும் பயன்படுத்தலாம். 4.7.2. தேசிய வீட்டுவசதி வங்கியிடமிருந்தோ அல்லது மற்ற உயர் நிதி நிறுவனங்களிடமிருந்தோ பெற்ற நிதியளவிற்கேற்ப கடன் உச்சவரம்பை உயர்த்தி கொண்டு வங்கிகள் வீட்டுவசதிக் கடன் அளிக்கலாம். 5. கூடுதல் துணை கடன்வசதிகள்
6.1 நகர கூட்டுறவு வங்கிகள் தத்தம் மாநிலங்களில் இயங்கும் வீட்டுவசதி வாரியங்களுக்கு கடன் வழங்கலாம். அப்போது அத்தகைய கடன்களுக்கான வட்டிவிகிதத்தை வங்கிகள் தம்மிச்சைப்படி விதித்திடலாம். 6.2 வீட்டுவசதி வாரியங்களுக்குக் கடன் வழங்கும்போது அவை பயன்பாட்டாளர்களிடமிருந்து கடன்வசூலிப்பதில், காட்டும் செயல் திறமையைக் கருத்தில் கொள்ள வேண்டும் அதோடு கூடவே அவர்கள் சரியான நேரத்தில் தவறாமல் கடனைத் திருப்பியளிப்பதை வீட்டுவசதி வாரியங்கள் உறுதி செய்திடல் வேண்டும் என்பதை வற்புறுத்திட வேண்டும். 7. கட்டிடக்கலைஞர்கள்/ஒப்பந்தக்காரர்களுக்கு கடன் வசதிகள்7.1 கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தங்களின் பணிக்காக பெரும்பணம் தேவைப்படுவதால் பயனாளிகளிடமிருந்தே ஓரளவு பணத்தை முன்பணமாகப் பெற்று தங்களின் பணியைத் தொடங்குவார்கள். ஆகவே அவர்களுக்கு வங்கியின் நிதியுதவி பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. இத்தகையோருக்கு தொடக்க நிலைக் கூட்டுறவு வங்கிகள் கடனளிப்பது இரட்டிப்பு கடனுதவியாக அமைந்துவிடும். ஆகவே வங்கிகள் இத்தகையோருக்கு கடனளிப்பதை இயல்பாகத் தவிர்க்க வேண்டும். 7.2. சிற்சில சமயங்களில் ஒப்பந்தக்காரர்கள் முன்பணம் ஏதும் பெறாமல் தாமாகவே சில சிறிய கட்டிட வேலைகளை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கலாம். கட்டிடப் பொருட்களின் அடமானத்தின்பேரில், வங்கியின் துணை விதிகளுக்கு உட்பட்டும் அவ்வப்போது ரிசர்வ் வங்கி வழங்கும் கட்டளைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஒப்பவும் இந்த கடனுதவியை அளிக்கலாம். 7.3. வங்கிகள் முதலில் கடன்விண்ணப்பங்களை முழுவதுமாக அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த விண்ணப்பதாரின் நோக்கத்தின் நேர்மை, தேவைப்படும் கடனுதவியின் அளவு, அவரின் கடன் பெறக் கூடிய தகுதி, திருப்பியளிக்கும் திறன் ஆகியவற்றை வங்கிகள் கவனிக்கவேண்டும். வழக்கமாகக் கடைப்பிடிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வப்போது கடனாளியின் இருப்பு அறிக்கைகள், ஆய்வுகள், கணக்கிலிருந்து பணமெடுக்க வரையறுக்கப்பட்ட அதிகார முறைமைகள், இருப்பில் 40% முதல் 50% வரை பிணைய ஈட்டுத் தொகை ஆகியவற்றை கவனிக்க வேண்டும். கணக்கிலிருந்து பணமெடுக்கும் அதிகாரத்தை வரையறுக்க கட்டிடப்பணிக்கு உபயோகப் படுத்தப்பட்ட கட்டிடப்பொருட்கள் இருப்புக்கணக்கு அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 7.4. நிலத்தை மதிப்பிடுதல்: கட்டிடம் கட்டுபவர்கள்/ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு நிதி அளிக்கும்பொழுது சில வங்கிகள் பாதுகாப்பு நோக்கத்தில் நிலத்தின் மீது எழுப்பப்படும் கட்டிடத்தின் மதிப்பை மற்றும் செலவுகளை கழித்து நிலத்தை மதிப்பீடு செய்கின்றன. இது வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறைகளோடு ஒத்து போகவில்லை. இது தொடர்பாக, தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால், நகர கூட்டுறவு வங்கிகள் நிதி அடிப்படையில் அல்லது நிதி அடிப்படையல்லாத வசதிகளை கட்டிடம் கட்டுபவர்கள்/ஒப்பந்ததாரர்கள் வீட்டுவசதி திட்டத்திற்காக நிலம் வாங்குவதற்கு அளிக்கக்கூடாது. மேலும் எங்கேனும் நிலம் இணைபிணையாக ஒப்புக்கொள்ளப்படும்பொழுது நிலத்தின் மதிப்பீடு நடப்பு சந்தை விலைக்கு நிகராக இருக்கவேண்டும். 7.5. எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் வங்கிகள் இணைப்பிணைப் பொருட்களைக் கைக்கொள்ளலாம். கட்டிடப்பணி வளர வளர, ஒப்பந்தக்காரர்கள் பணத்தைப்பெற்று அதைக் கடன் கணக்கை குறைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலும் வங்கிகள் இணைப்பிணையம் கிடைக்காதபோது மும்முனைப் பரிவர்த்தனை உடன்படிக்கைகளை கடனாளி மற்றும் நுகர்வோருடன் அமைத்துக் கொள்ளலாம். 7.6 இவ்வாறு அளிக்கப்படும் நிதியுதவிகள் வீட்டுவசதிக் கடன்களாகக் கருதப்பட மாட்டாது. 8. முன்னுரிமைப் பிரிவில் வீட்டுவசதிக்கடன் 8.1. பின்வரும் வகையிலமைந்த வீட்டுவசதி கடன்கள் முன்னுரிமைப் பிரிவுக் கடன்களாகக் கருதப்படலாம்.
8.2. தேசிய வீட்டுவசதி வங்கி மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி வாரியம் இவை வெளியிடும் பங்குப்பத்திரங்களில் ஏப்ரல் 1, 2007 அன்றோ அல்லது அதன் பின்னரோ செய்யப்படும் முதலீடுகள் முன்னுரிமைத்துறை கடனுதவியாக வகைப்படுத்தமுடியாது. 9. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 9.1 ஒரே வீட்டுக்கான பத்திரங்களின் பல்வேறு நகல்களைத் தயாரித்து அவற்றைக்காட்டி பல்வேறு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்ற மோசடி வழக்குகள் பல ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளன. அதிக அளவு கடனுதவி பெற வழிசெய்யும் வகையில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் போலியான வருமானச்சான்றிதழ்களைத் தயாரித்து அவற்றின் அடிப்படையில் உயர் கடனுதவி பெற்றவர்களும் உண்டு. சொத்துமதிப்பினைக் கணக்கிடும்போதும் போலியாக அதிகத் தொகையைக் காட்டி, பிணை ஈட்டுத்தொகை கட்டுவதைத் தவிர்த்திடுவோரும் உண்டு. 10. தேசிய கட்டுமானப் பணி நெறிமுறைகள் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் முழுமையான “தேசிய கட்டுமானப் பணிக்கான நெறிமுறை 2005” என்ற கொள்கையை அறிவித்தது. நாடெங்கிலும் உள்ள கட்டுமானப் பணிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்தது. பாதுகாப்பான சிறந்த கட்டுமானப் பணிகளை வளர்த்திடத் தேவையான முக்கிய அம்சங்கள் அனைத்தும் இதில் அளிக்கப்பட்டன. நிர்வாக அமைப்பு சார்ந்த விதிமுறைகள், ஒழுங்கான கட்டுமானப் பணி வளர்ச்சிக்கான விதிகள், பொதுவான கட்டிட அமைப்பு முறைமைகள், தீவிபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டுமானப் பணிகளில் பயன்படும் மூலப்பொருட்களுக்கான தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள், கட்டுமான வரைபட அமைப்புகள், கட்டுமானப் பணி (பாதுகாப்புடன் கூடிய) குழாய் பொருந்தும் அமைப்புகள், மராமத்து ஆகிய அனைத்து வகை சார்ந்த வழிகாட்டுதல்களும் இந்த நெறிமுறைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக கட்டிடங்களின் பாதுகாப்பு, குறிப்பாக இயற்கை சீற்றங்களின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும். தமது கடன்கொள்கைகளில் வங்கியின் நிர்வாகக் குழுமம் இத்தகு நெறிமுறைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். தேசிய கட்டுமானப் பணிசார்ந்த நெறிமுறை குறித்த விவரமான பல தகவல்களை இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் காணலாம். (www.bis.org.in)இணைப்பு – 1 அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்திற்கு கடன் வேண்டப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்வதற்கான நடைமுறை தில்லி உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதல் A. கட்டிடப்பணிக்கான வீட்டுவசதிக் கடன்
B. கட்டப்பட்ட கட்டிடங்களை நேரடியாக வாங்க வீட்டுவசதிக் கடன்
C. அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் அங்கீகாரம் பெறும் வரை அதற்கான வளர்ச்சிநிதிக் கட்டணம் செலுத்தப்படும் வரை அத்தகைய குடியிருப்புகளுக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கக் கூடாது. D. குடியிருப்புக்காகக் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை வணிகத்திற்காகப் பயன்படுத்தும் நோக்கத்தில் ஒருவர் அவ்வாறே பயன்படுத்த, உறுதி மொழியும் அளித்தால், அதற்காகக் கடன் விண்ணப்பித்தால், வங்கி அத்தகு நோக்கங்களுக்காக வீட்டுவசதிக் கடன் அளிக்கக் கூடாது. E. மேற்கண்ட வழிகாட்டிகள் விவசாய நிலத்தில் கட்டப்பட்ட பண்ணை வீடுகளுக்கு பொருந்தாது. ஏனெனில் இந்த விவசாய நிலங்கள் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி மன்றங்களின் எல்லைக்கு வெளியே உள்ளதாலும், இந்த நிர்வாகங்கள் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் விவசாயிகளால் கட்டப்படும் பண்ணைவீடுகளுக்கு நிறைவு பெற்றமைக்கான சான்றிதழ்களும் அளிக்கப்படுவதில்லை. இத்தகைய அனைத்து விஷயங்களுக்கும் அந்தந்த உள்ளூர் விதிகள் பொருந்தும். பிற்சேர்க்கை வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை தொகுப்புச்சுற்றறிக்கையில் அடங்கியுள்ள சுற்றறிக்கையின் பட்டியல்
தொகுப்புச் சுற்றறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட வீட்டுவசதிக்கான நிதியுதவி குறித்த அறிவுறுத்தல்கள் தொடர்புடைய இதர சுற்றறிக்கைகளின் பட்டியல்
|