இந்தியாவில் குடியிருப்போரல்லாதாரின் சாதாரண ரூபாய் கணக்கு(NRO Account) - தொகுப்புச் சுற்றறிக்கை - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்தியாவில் குடியிருப்போரல்லாதாரின் சாதாரண ரூபாய் கணக்கு(NRO Account) - தொகுப்புச் சுற்றறிக்கை
RBI/2009-2010/23 ஜூலை 1, 2009 பெறுநர்: அந்நியச் செலாவணியில் வணிகம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட அன்புடையீர், இந்தியாவில் குடியிருப்போரல்லாதாரின் சாதாரண ரூபாய் கணக்கு பல்வேறு காலகட்டங்களில் திருத்தங்களுடன் வெளியிடப்பட்ட அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999 பிரிவு 6, துணைப் பிரிவு (1)(2) இன்படியும், அதே சட்டத்தின் அறிவிப்பு எண் 5/2000 RB மே 3, 2000 தேதியிட்டதின்படியும் இந்தியாவுக்கு வெளியே குடியிருப்போரிடமிருந்து பெறப்படு வைப்புகளை, அந்நியச் செலாவணியில் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களும் வங்கிகளும் ஏற்பது பற்றி ஒழுங்கு முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. 2. இந்தியாவில் குடியிருப்போரல்லாதாரின் சாதாரண ரூபாய் கணக்கு பற்றிய அனைத்து அறிவுரைகளையும் ஒரே இடத்தில் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இத்தொகுப்புச்சுற்றறிக்கை வெளியிடப் படுகிறது. இதற்கும் பயன்படுத்தப்பட்ட சுற்றறிக்கைகள்/அறிவிப்புகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 3. ஓர் ஆண்டுக்கான கால வரம்பெல்லையில் இத்தொகுப்புச் சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது. 2010 ஜூலை முதல் தேதியில் இது விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிப்பிக்கப்பட்ட தொகுப்புச்சுற்றறிக்கை வெளியிடப்படும். தங்கள் உண்மையுள்ள (சலீம் கங்காதரன்) பொருளடக்கம் 1. விளக்கங்கள் 2. தகுதி 3. கணக்கு வகைகள் 4. குடியிருப்போருடன்/குடியிருப்போரல்லாதாருடன் கூட்டுக் கணக்கு 5. அனுமதிக்கப்பட்ட வரவு/பற்று 6. சொத்துக்கள் அனுப்புதல் 7. இந்தியாவுக்கு வருகை தரும் இந்திய வம்சாவளியினர் 8. அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களும் வங்கிகளும் கணக்கு வைத்திருப்போருக்கும் மூன்றாவது நபருக்கும் கடன்/ இருப்புக்கு அதிகமாக வழங்குதல் ஆகியவைகளை அளித்தல் 9. கணக்கு வைத்திருப்போரின் குடியிருப்பு நிலை மாறுதல் 10. குடியிருப்பு நிலை மாறும்போது கடன்/இருப்புக்கு அதிகமாக வழங்குதல் ஆகியவைகளை நடத்தும் முறை 11. குடியிருக்கும்/குடியிருக்காத வாரிசுக்கு நிதி வழங்குதல் 12. குடியிருப்போரல்லாதவரின் சாதாரண ரூபாய் கணக்கை இயக்குவதற்கு அங்கீகாரம் பெற்றவரின் செயல் முறைகள் 13. படிப்பதற்காக அயல்நாடு செல்வோருக்கான வசதிகள் 14. பன்னாட்டு கடன் அட்டை 15. வருமான வரி இணைப்பு -1 ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிவிக்கை இணைப்பு -2 அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிக்கான செயல்முறை உத்தரவுகள் பிற்சேர்க்கை குறிப்பு:1. விளக்கங்கள் : குடியிருப்போரல்லாத இந்தியன் (NRI) அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் ஒழுங்குமுறை 2, அறிவிப்பு எண் 5, மே 3, 2000 தேதியிட்டதுபடி இந்தியாவுக்கு வெளியே குடியிருக்கும் இந்தியக் குடிமகன் அல்லது இந்திய வம்சா வளியினர். இந்திய வம்சா வளியினர் (PIO) மேலே குறிப்பிட்டச் சட்டப்பிரிவின்படி, பங்களா தேஷ் அல்லது பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாட்டுக்குடிமகனும் (அ) இந்திய கடவுச் சீட்டு எப்போதாவது வைத்திருந்தால் (ஆ) அவர் அல்லது அவரது பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டி, இந்திய அரசியல் சாசனம் அல்லது 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டப்பிரிவு 57இன்படி, இந்தியக் குடிமகனாக இருந்திருந்தால் (இ) இந்தியக் குடிமகன் அல்லது மேலே சொல்லப்பட்ட (அ) (ஆ) பிரிவில் உள்ளவரது துணைவர் அல்லது துணைவி2. தகுதி (அ) இந்தியாவுக்கு வெளியே குடியிருக்கும் எந்த ஒரு நபரும் (அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் ஒழுங்குமுறை 2இன்படி) அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வணிகரிடமோ வங்கியிடமோ, NRO கணக்கைத் துவங்கலாம். அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம், ஒழுங்குமுறைகள், விதிகளை மீறாத உண்மையான நடவடிக்கைகளுக்காக மட்டும் துவக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும். (ஆ) பங்களாதேஷ், பாகிஸ்தான் நாட்டுக் குடிமகன் அல்லது வர்த்தக அமைப்பு கணக்கைத் துவக்க விரும்பினால் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை.3. கணக்கு வகைகள் NRO கணக்குகள் நடப்பு, சேமிப்பு, தொடர், நிரந்தர வைப்புக் கணக்காக இருக்கலாம். பல்வேறு காலகட்டங்களில் திருத்தங்களுடன் வெளியிடப்படும் ரிசர்வ் வங்கியின் ஆணைகள் அறிவுரைகளுக்கு ஏற்ப இக்கணக்குகளின் வட்டிவிகிதம், கணக்குத் துவக்கும் முறை, செயலாக்க முறைகள் இருக்கும். 4. குடியிருப்போருடன்/குடியிருப்போரல்லாதாருடன் கூட்டுக் கணக்கு குடியிருப்போருடனோ குடியிருப்போரல்லாதாருடனோ கூட்டாக இக்கணக்கை வைத்துக் கொள்ளலாம். 5. அனுமதிக்கப்பட்ட வரவு/பற்று அ. வரவு: i. இந்தியாவுக்கு வெளியேயிருந்து, வழக்கமான வங்கிகள் வாயிலாக, எளிதாக மாற்றிக் கொள்ளும்படியான அயல்நாட்டு நாணய அனுப்பீடுகள் ii. இந்தியாவுக்குத் தற்காலிகமாக வரும்போது, கணக்கு வைத்திருப்போர் கொடுக்கும் எளிதாக மாற்றிக் கொள்ளும் படியான அயல்நாட்டுப் பண நாணயங்கள் 5000 அமெரிக்க டாலருக்கு அதிகமான பணமெனில், நாணய அறிவிப்புப் படிவத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியேயிருந்து கொண்டுவரப்பட்டதற்கு அத்தாட்சியாக, காசாக மாற்றிய சான்றிதழும் அளிக்கப்பட வேண்டும். iii. இந்தியாவில் குடியிருப்போரல்லாதாரின் வங்கிகளில் அவர்கள் வைத்திருக்கும் ரூபாய் கணக்கிலிருந்து செய்யப்படும் மாற்றங்கள் iv. கணக்கு வைத்திருப்போருக்குச் சட்டப்படி வரவேண்டிய ரூபாய்கள் அவருக்கு வரவேண்டிய பணங்களான வாடகை, பங்கீட்டுத் தொகை, ஓய்வூதியம், வட்டி முதலானவை இதிலடங்கும். v. அசையாச் சொத்துக்கள் உள்ளிட்ட சொத்துக்களை விற்ற பணமும் இதிலடங்கும். அசையாச் சொத்துக்கள் ரூபாய்/அயல்நாட்டுப் பணம்/சட்டப்படி/வாரிசு வகையில் வாங்கியதாக/வந்ததாக இருக்க வேண்டும். ஆ. பற்று: i. ரிசர்வ் வங்கியால் ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட அனைத்து முதலீடுகளிலும் சேமிப்பு உட்பட அனைத்து உள்ளூர் செலுத்துதல் களுக்கும் இக்கணக்கிலிருந்து செலவு செய்யலாம். ii. கணக்கு வைத்திருப்போரின் வாடகை, பங்கீட்டுத்தொகை, ஓய்வூதியம், வட்டி போன்றவைகளுக்காக இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்படும் பண அனுப்பீடுகளுக்கு இக்கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். iii. ஏப்ரலிருந்து மார்ச் வரையிலான காலகட்டமான ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் வரை அனுப்பலாம். நியாயமான காரணங்களுக்காகவும், அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிக்குத் திருப்தி ஏற்படும் வகையிலும் இப்பண அனுப்பீடு அமைதல் வேண்டும். 6. சொத்துக்கள் அனுப்பீடு 6.1. இந்திய வம்சாவளியினரல்லாத வெளிநாட்டுக் குடிமகன் சொத்துக்களை அனுப்புதல் இந்தியாவில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற நேபால் அல்லது பூட்டான் நாட்டுக் குடிமகன் அல்லது இந்திய வம்சா வளியினரல்லாத வெளிநாட்டுக் குடிமகன் அல்லது அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் பிரிவு 6 துணைப்பிரிவு (5) இன்கீழ் சொல்லப்பட்ட ஒருவரிடமிருந்து சொத்துக்களை வாரிசாகப் பெற்றவர் அல்லது இந்தியக் குடியிருப்பவரின் மனைவி, அவரது மறைவிற்குப்பின், இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்து வந்தால், அப்பெண் அடைந்திட்ட வாரிசு உரிமச்சொத்துக்களை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஒரு நிதி ஆண்டில் அனுப்பலாம். ஆனால் சொத்துக்களை அடைந்ததற்கு, வாரிசு உரிமையாக அல்லது சொத்துக்களின் சட்ட வடிவிற்கான ஆதார ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். 2002 அக்டோபர் 9 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை எண் 10/2002யில் மத்திய அரசின் நேரடி வரிக்கான குழுமம் கூறியுள்ளபடி அனுப்புவர் ஒப்புதல் வாக்குமூலத்தையும் தணிக்கையாளர் ஒருவரிடமிருந்து சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். 6.2. குடியிருப்போரல்லாதார்/ இந்திய வம்சாவளியினர் சொத்துக்களை அனுப்புதல் அ. இந்தியாவில் குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சா வளியினர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஒரு நிதி ஆண்டில் அனுப்பலாம். NRO கணக்கிலிருந்து அல்லது சொத்துக்களை விற்ற பணத்திலிருந்து ஆனால் சொத்துக்களை அடைந்ததற்கு, வாரிசு உரிமையாக அல்லது சொத்துக்களின் சட்ட வடிவிற்கான ஆதார ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். ஆ. இந்தியாவில் குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சா வளியினர், மேலே ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரையறைக்குள், சொத்துக்களை விற்ற தொகையை அனுப்பலாம். தங்களது தாய் அல்லது தந்தை செய்துகொண்ட ஒப்பந்தம் மூலமாக அடைந்த சொத்து அல்லது 1956 ஆம் வருடத்திய கம்பெனிச் சட்டம் பிரிவு 6இன்கீழ் சொல்லப்பட்ட நெருங்கிய உறவினர் செய்து கொண்ட ஒப்பந்தம் ஆகியவை மூலமடைந்த சொத்தாகவும் இருக்கலாம். ஒப்பந்தத்தின் அசல் ஆவணத்தையும், பணம் அனுப்புபவரின் ஒப்புதல் வாக்குமூலத்தையும், தணிக்கையாளரின் சான்றிதழையும், 2002 அக்டோபர் 9 ஆம் தேதியிட்ட மத்திய அரசின் நேரடி வரிக்குழுமத்தின் சுற்றறிக்கை எண் 10/2002 இல் சொல்லியுள்ள படிவத்தில் அளிக்கவேண்டும். 6.3.ரூபாய் நிதியிலிருந்து இந்தியாவில் வாங்கிய சொத்துக்கள் குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சா வளியினர் அவர் குடியிருப்பாளாராக இருந்தபோது வாங்கிய சொத்துக்களை விற்ற பணத்தை அனுப்பலாம் அல்லது ரூபாய் நிதியிலிருந்து அனுப்பலாம். நிதியை எடுக்கமுடியாத காலமெனும் எந்த காலவரையரையும் கிடையாது. நிதி ஆண்டில் முன்னர் கூறப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் உச்ச வரம்பிற்கு உட்பட்டு இவைகளை மேற்கொள்ளலாம். 6.4.நிபந்தனைகள்
7. இந்திய வம்சாவளி இல்லாத வெளிநாட்டவர் இந்தியாவுக்கு வருகை தரும்போது: NRO நடப்பு/சேமிப்பு கணக்குகளை இந்திய வம்சாவளி இல்லாத வெளிநாட்டவர் இந்தியாவுக்கு வரும்போது துவக்கலாம். அதற்கான பணம் இந்தியாவுக்கு வெளியேயிருந்து வங்கிகள் வழியாக அனுப்பப் பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வணிகர்/வங்கி, அவர் இந்தியாவை விட்டுப் புறப்படும்போது, அவரது கணக்கில் நிலுவையில் உள்ள தொகையை அயல்நாட்டுப் பணமாக மாற்றிக் கொடுக்கலாம். ஆனால் அக்கணக்கு 6 மாத காலத்திற்கு மிகாத காலத்திற்கே மட்டும் தான் இயக்கத்திலிருந்திருக்க வேண்டும். மேலும் அக்கணக்கு அதற்குச் சேரும் வட்டியைத் தவிர உள்ளூர் நிதிகள் எதற்கும் வரவாகச் சேர்த்திருக்கக்கூடாது. ஒரு வேளை, ஆறு மாதத்திற்குமேல் அந்தக் கணக்கை பராமரிக்க நேர்ந்தால், கணக்கு வைத்திருப்பவர், நிலுவைத் தொகையை அனுப்பி வைக்க அவர் இருக்கும் பிராந்தியல் உள்ள ரிசர்வ் வங்கிக்கு ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பத்தை எழுதி சமர்ப்பிக்க வேண்டும். 8. கடன்/இருப்புக்கு அதிகமாக வழங்கல் அ. கீழே கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட கால வைப்புகளின் பிணையத்தில், அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள்/ வங்கிகள் குடியிருப்போரல்லாத கணக்கு வைத்திருப்போருக்கும், மூன்றாவது நபர்களுக்கும் கடன் வழங்கலாம். I. விவசாயம், தோட்டக்கலை நடவடிக்கைகள், வீடு, மனை வியாபாரம், மறுகடனளிப்பு ஆகியவை தவிர கடன் வாங்கியவரின் சொந்தத் தேவைகள் அல்லது/மற்றும் வியாபாரத்திற்காக மட்டுமே கடன் தொகை பயன் படுத்தப்பட வேண்டும். II. பல்வேறு கால கட்டங்களில் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி விகிதம், கடன்வரம்பு ஆகியவை பற்றிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும். III. வணிகம்/தொழிலுக்குக் கடன் அளிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய வழிமுறைகள் மூன்றாவது நபருக்கு அளிக்கும் கடன்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆ. வட்டிவிகிதம் போன்ற விஷயங்களில் அளிக்கப்படும் ஆணைகளுக்கு ஒப்பவும், அங்கீகரிக்கப்பட்ட வணிகர்/வங்கி கணக்கு வைத்திருப்பவரின் வணிக நடவடிக்கைகள் மீது எடுக்கும் தீர்ப்பின் அடிப்படையிலும், அவர்களுக்கு இருப்புக்கு மேல் வழங்குதலான கடன் வசதியை அளிக்கலாம். 9. கணக்கு வைத்திருப்போரின் குடியிருப்பு நிலை மாறுதல் (a) குடியிருப்போர் நிலையிலிருந்து குடியிருப்போரல்லாதருக்கு மாறுதல் நேபால், பூட்டான் தவிர வேறு எந்த நாட்டுக்கும் வேலைக்காக அல்லது வியாபாரத்திற்காக அல்லது விடுமுறைக்காக அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் நிச்சயமாகச் சொல்ல முடியாத காலத்திற்கு அந்த நாட்டில் வசித்தால், அல்லது வங்கிக்கணக்கு NRO கணக்காக பெயரிடப்படும். ஆனால் இந்தியாவில் வசிப்பவர் நேபால் அல்லது பூட்டானுக்கு வேலைக்காக அல்லது வியாபாரத்திற்காக அல்லது விடுமுறைக்காக அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் நிச்சயமாகச் சொல்ல முடியாத காலத்திற்குச் சென்றால், அவரது வங்கிக் கணக்கு குடியிருப்போர் கணக்காகவே தொடரும். NRO கணக்காக மாற்றக்கூடாது. (b) குடியிருப்போரல்லாதார் நிலையிலிருந்து குடியிருப்போருக்கு மாறுதல் கணக்கு வைத்திருப்பவர் இந்தியாவுக்கு வேலைக்காக அல்லது வியாபாரத்திற்காக அல்லது விடுமுறைக்காக அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் நிச்சயமாகச் சொல்ல முடியாத காலத்திற்கு வந்தால் NRO கணக்கு குடியிருப்போர் கணக்காக மாற்றி விடலாம். ஆனால் தற்காலிகமாக இந்தியாவுக்கு அவர் வந்தால், அந்தக் காலத்திற்கும் அக்கணக்கு NRO கணக்காகவே தொடர்ந்து நீடிக்கும். 10.குடியிருப்பு நிலை மாறும்போது கடன்/இருப்புக்கு அதிகமாக வழங்குதல் ஆகியவைகளை நடத்தும் முறை இந்தியாவில் வசிக்கும்போது ஒருவர் கடன்/இருப்புக்கு அதிகமாக வழங்கும் வசதிகளை ஒரு வங்கியிடமிருந்து பெற்று, பின்னர் அவர் இந்தியாவுக்கு வெளியே வாழ நேரிட்டால், வங்கி தனது தன் விடுப்புரிமைப்படியும் வணிக நடவடிக்கைத் தீர்ப்பின் அடிப்படையிலும் அக்கடன் வசதிகளை அவருக்குத் தொடர்ந்து அளிக்கலாம். அப்படிப்பட்ட சூழலில், வட்டியும் கடனை திருப்பி அடைத்தாலும் பண அனுப்பீடு முறை அல்லது இந்தியாவில் அவரது சட்டப்பூர்வமான வழிகளிலிருந்து செய்யப்பட வேண்டும். 11. குடியிருப்போரல்லாத/குடியிருப்போர் வாரிசுக்கு நிதி வழங்கல் NRO கணக்கு வைத்திருப்பவர் இறக்க நேரிட்டு, குடியிருப்போரல்லாத வாரிசாக இருந்தால் கட்ட/வழங்க வேண்டிய தொகையை வாரிசின் NRO கணக்கிற்கு அங்கீகரிக்கப்பட்ட வணிகர்/வங்கி மாற்ற வேண்டும். வாரிசு குடியிருப்போராக இருந்தால், இந்தியாவில் உள்ள அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும். 12. NRO கணக்கை இயக்க அங்கீகாரம் பெற்றவரின் செயல் முறைகள் NRO கணக்கை இயக்க பகர அதிகாரம் கொடுக்கலாம். குடியிருப்போரல்லாத இந்தியர் (கணக்கு வைத்திருப்பவர்) குடியிருப்பவருக்கு பகர அதிகாரம் கொடுக்கலாம். ஆனால் அவரின் செயல்பாடுகள் கீழே கணடவைகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்க வேண்டும். i. ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளுக்குட்பட்டு தகுதிவாய்ந்த முதலீடுகள் உட்பட அனைத்து உள்ளூர் கொடுப்புகளும் ரூபாயில் இருக்க வேண்டும். ii. கணக்கு வைத்திருப்பவர் கட்டவேண்டிய வரிகள் கழித்து இந்தியாவில் நிகர நடப்பு வருவாயை இந்தியாவுக்கு வெளியே அனுப்பலாம். iii. பகர அதிகாரம் பெற்ற குடியிருப்பாளர் கணக்கு வைத்திருக்கும் குடியிருப்பாரல்லாதவரைத் தவிர வேறு யாருக்கும், அக்கணக்கில் இருந்து இந்தியாவுக்கு வெளியே பணம் அனுப்ப அனுமதி இல்லை. கணக்கு வைத்திருப்பவர் சார்பாக குடியிருக்கும் யாருக்கும் நன்கொடை ஏதும் அனுப்ப அனுமதி இல்லை. ஒரு NRO கணக்கிலிருந்து இன்னொரு NRO கணக்கிற்குப் பணமாற்றத்திற்கும் அனுமதி இல்லை. 13. படிப்பதற்கு அயல்நாடு செய்வதற்கான வசதிகள் அயல்நாட்டுக்குப் படிக்கச் செல்வோரும் குடியிருப்போர் அல்லாதாராகவே கருதப்படும். அவர்களுக்கு இருக்கும் அனைத்து வசதிகளும் இவர்களுக்கும் உண்டு. அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்ட ஒழுங்குமுறைகளுக்குட்பட்டு அவர்கள் இந்தியாவில் குடியிருக்கும் போது பெற்ற கல்வி மற்றும் பிற கடன்கள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்கும். 14. பன்னாட்டு கடன் அட்டை இந்தியாவில் குடியிருப்போரல்லாத இந்தியர்கள்/இந்திய வம்சா வளியினர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் பன்னாட்டு கடன் அட்டைகளை வழங்கலாம். ரிசர்வ் வங்கியின்முன் அனுமதி பெறத் தேவையில்லை. அட்டையைப் பயன்படுத்திய நடவடிக்கைகளுக்கு உள்ளக பண அனுப்பீடு முறை அல்லது அட்டைதாரரின் FCNR/NRE/ NRO கணக்குகளிலிருந்து பணம் அனுப்பப்பட வேண்டும். 15. வருமானவரி அக்டோபர் 9, 2002 தேதியிட்ட மத்திய அரசின் நிதிஅமைச்சம் நேரடி வரிக் குழுமத்தின் சுற்றறிக்கை எண் 10/2002 இல் கூறியுள்ள் (பார்வை AP(DIR வரிசை) சுற்றறிக்கை எண் 56 தேதி நவம்பர் 26, 2002) படிவத்தில் உறுதி மொழியும் தணிக்கையாளரிடமிருந்து சான்றிதழும் பணம் அனுப்புவர் அளித்தால், அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கி, கணக்கு வைத்திருப்போர் கட்ட வேண்டிய வரி போக கணக்கிலுள்ள நிகரத்தை அனுப்பலாம். இணைப்பு I ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிவிக்கை
இணைப்பு 2 குடியிருப்போர் அல்லாதோரின் ரூபாய்(NRO)கணக்கு 1. பொது அந்நியச் செலாவணி நிர்வாக சட்டம் 1999 (சட்டம்)ன்கீழ் உள்ள சட்டத்தின் ஷரத்துக்கள்/ ஒழுங்குமுறைகள்/ வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகள் ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் கவனமாகப் படிக்கவேண்டும். பல்வேறு பரிவர்த்தனைகளின் அனுப்புதல்களை அனுமதிக்க்கும் அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள் பற்றி ரிசர்வ் வங்கி பரிந்துரைக்காது. சட்டத்தின் பிரிவு 10 ன் உபபிரிவுகள் 5 ன் ஷரத்துக்களின்படி எந்த ஒரு நபர் சார்பாகவும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது அங்கீகரிக்கப்பட்ட முகவர், யார் சார்பாக பரிவர்த்தனை மேற்கொள்ளப் படுகிறதோ அவரிடமிருந்து ஒரு உறுதிமொழியையும் மற்றும் சில தகவல்களையும் பெற வேண்டும். இதன்படி சட்டத்தின்கீழ் உள்ள ஷரத்துக்களை பரிவர்த்தனைகளை மீறவோ, முரண்படவோ இல்லை என்பதனை அங்கீகரிக்கப்பட்டமுகவர் வங்கிகள் விண்ணப்பதாரரிடமிருந்து பெற்ற் தகவல்கள்/ஆவணங்கள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதற்குமுன் வரை பாதுகாத்திடவேண்டும். யார் சார்பாக பரிவர்த்தனை நடத்தப்படுகிறதோ, அவர் அங்கீகரிக்கப்பட்டமுகவர் வங்கியின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தால், அது பற்றி அவர் எழுத்து பூர்வமாக மறுப்பைத் தெரிவிக்கவேண்டும். சட்டம் மீறப்படுவதாலோ, முரண்பட்டு நடப்பதாலோ, விதிகள் அல்லது ஒழுங்குமுறைகள் அல்லது வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் இவற்றுக்கு மாறாக உள்ளது என்று ஒரு பரிவர்த்தனையை அங்கீகரிக்கப்பட்டமுகவர் வங்கி மறுக்கும்பொழுது, அதனை ரிசர்வ் வங்கிக்கு தெரியப்படுத்தவேண்டும். சமச்சீரான நடைமுறைகளை பராமரிக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்பட்டமுகவர் வங்கிகள் சட்டத்தின் பிரிவு 10ன் உட்பிரிவு 5ன் ஷரத்துக்களை கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் கிளைகளிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் ஆவணங்கள் அல்லது தேவையானவற்றைப் பெறும். 2. பங்களாதேஷ்/ பாகிஸ்தான் தனிப்பட்டவர்கள்/அமைப்புகள் கணக்குகள் தொடங்குவது. பங்களாதேஷ்/ பாகிஸ்தான் தனிப்பட்டவர்கள்/அமைப்புகள் கணக்குகளைத் தொடங்கும்பொழுது ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அனைத்து அம்மாதிரி வேண்டுகோள்களும், தலைமைப் பொது மேலாளர்-பொறுப்பு, இந்திய ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணித்துறை (அந்நிய முதலீட்து பிரிவு), மைய அலுவலகம், மும்பை-400 001என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். 3. நடப்பு வருமானத்தை அனுப்புதல் வாடகை, ஆதாயப்பங்கு, ஓய்வூதியம், வட்டி ஆகியவை போன்ற நடப்பு வருமானம் இந்தியாவிற்கு வெளியே ஒரு கணக்குதாரரால் அனுப்புப்படுவது குடியிருப்போர் அல்லாதோரின் சாதாரண ரூபாய் கணக்கிற்கு பற்று என்பது அனுமதிக்கப்படுகிறது. குடியிருப்போர் அல்லாதோரின் சாதாரண ரூபாய் கணக்கு இல்லாத குடியிருப்போர் அல்லாத இந்தியர்களின் வாடகை, ஆதாயப்பங்கு, ஓய்வூதியம், வட்டி ஆகியவை போன்ற நடப்பு வருமானத்தை அனுப்புதலை அங்கீகரிக்கப்பட்டமுகவர் வங்கிகள் கீழ்க்கண்ட முறையில் அனுமதிக்கிறது அதாவது அனுப்பும் தொகை அதற்குரிய தகுதி பெற்றது என்றும் உரிய வரி செலுத்தப்பட்டுவிட்டது என்றும் ஒரு பட்டயக் கணக்காளர் பொருத்தமான சான்றிதழை வழங்கியப்பிறகு அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்படும். 4. வரையறைகள் a. அசையாச் சொத்துக்கள் விற்று அனுப்பும் வசதி. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, சைனா, ஆப்கானிஸ்தான், ஈரான், நேபால் மற்றும் பூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை. b. மற்ற நிதியியல் சொத்துக்களை விற்று அனுப்பும் வசதி பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபால் மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு இல்லை. 5. வரி கட்டுதலைக் கடைப்பிடித்தல் மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய நிதியமைச்சகம், இந்திய அரசு அதன் சுற்றறிக்கை எண்10/2002 அக்டோபர், 9,2002 தேதியிட்ட (cf. A.P. (DIR வரிசை) 2002 நவம்பர் 26 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 56 பரிந்துரைப்படியான படிவங்களில் பட்டயக் கணக்காளரிடமிருந்து பெற்ற சான்றிதழ் மற்றும் அனுப்புபவரின் உறுதிமொழி ஆகியவற்றை அளித்தால் குடியிருப்போர் அல்லாதோருக்கு அனுப்புவதற்கான அனுமதியை அங்கீகரிக்கப்பட்டமுகவர் வங்கிகள் அளிக்கலாம். பிற்சேர்க்கை இந்தியாவில் குடியிருப்போரல்லாதாரின் சாதாரண ரூபாய் கணக்கு இவை சம்பந்தமாக தொகுப்புச்சுற்றறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட அறிவிக்கைகள்/சுற்றறிக்கைகளின் பட்டியல்
குறிப்பு:
|