குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர்/அயல் நாட்டவர் அனுப்பீடு வசதிகளின் விபரங்களடங்கியத் தொகுப்புச் சுற்றறிக்கை - ஆர்பிஐ - Reserve Bank of India
குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர்/அயல் நாட்டவர் அனுப்பீடு வசதிகளின் விபரங்களடங்கியத் தொகுப்புச் சுற்றறிக்கை
RBI/2009-2010/24 ஜூலை 1, 2009 பெறுநர்: அந்நியச் செலாவணியில் வணிகம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட அன்புடையீர், குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர்/அயல் நாட்டவர் அனுப்பீடு வசதிகளின் விபரங்களடங்கியத் தொகுப்புச் சுற்றறிக்கை குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர்/அயல் நாட்டவர் ஆகியோருக்கான அனுப்புதல் வசதிகள், அவ்வப்போது திருத்தத்திற்கு உட்படும் அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999 பிரிவு 6ன் உட்பிரிவுகள் (1) மற்றும் (2) ஆகியவைகளுடன், FEMA எண் 13/2000-RB மற்றும் FEMA எண் 21/2000-RB, 2000 மே 3ஆம் தேதியிட்ட அறிவிப்புகளால் முறைப்படுத்தப்படுகிறது. 2. இத்தொகுப்பு சுற்றறிக்கை “குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர்/அயல் நாட்டவர் ஆகியோருக்கான அனுப்புதல் வசதிகள்” என்ற தலைப்பில் அனைத்து உத்தரவுகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது. இந்த தொகுப்புச் சுற்றறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றறிக்கைகள்/அறிவிப்புகள் பட்டியலாக பிற்சேர்க்கையில் கொடுக்கப் பட்டுள்ளன. 3.. இத்தொகுப்புச் சுற்றறிக்கை ஒரு வருட காலத்திற்கு அமலில் இருக்கும். 2010 ஜூலை முதல் தேதியில் இது விலக்கிக் கொள்ளப்படும். திருத்தியமைக்கப்பட்ட தொகுப்புச்சுற்றறிக்கை அதற்குப் பதிலாக வெளியிடப்படும். தங்கள் உண்மையுள்ள (சலீம் கங்காதரன்) பொருளடக்கம்
இணைப்பு I இணைப்பு II பிற்சேர்க்கை குறிப்பு 1. குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர்/ அயல் நாட்டவர் ஆகியோருக்கான அனுப்புதல் வசதிகள் இந்தியாவிற்கு வெளியே சொத்துக்களை மாற்றுவதற்கு உள்ள ஒழுங்குமுறைகள், இந்தியாவில் வசிப்பவராக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அறிவிப்பு எண் FEMA 13/2000-RB மற்றும் FEMA 21/2000-RB இரண்டுமே 2000ஆம் ஆண்டு மே 3ஆம் தேதியிட்டது மற்றும் இந்த அறிவிப்புகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் ஆகியவற்றில் அடங்கும். ஆகவே மூலதனச் சொத்துக்களை இந்தியாவிலிருந்து அனுப்ப, இந்தியாவிற்குள் அல்லது வெளியில் வசிப்பவர் என்று யாராக இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் FEMA விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளுக்குட்பட்டு அத்தியாவசியமான ஒன்றாகிறது. 2. குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர் – இவர்களை பற்றிய விளக்கங்கள் குடியிருப்பவர் அல்லாத இந்தியர் என்பவர் யாரெனில் இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியக் குடிமகன். FEMA அறிவிப்பு எண் 13/2000 மே 3 தேதியிட்ட விதி 2ன்படி, குடியிருப்பவரல்லாத இந்தியர் என்பது, இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியக் குடிமகன் ஆவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பவர்கள், வங்கதேசம் அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர, வேறு எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும் (a) அவர் ஏதாவது ஒரு நேரத்தில் இந்திய கடவுச் சீட்டு வைத்திருந்தவராகவும் அல்லது (b) இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 அல்லது இந்திய அரசியலமைப்பின்படி, அவரோ அல்லது அவரது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி இவர்களில் ஒருவரோ இந்திய அரசியலமைப்புச்சட்டம் அல்லது 1955 குடியுரிமைச்சட்டம் இவற்றின் இந்தியாவின் குடிமகனாக இருக்கும்பட்சத்தில் அல்லது (c) இந்தியக் குடிமகனின் துணைவராகவோ (a) அல்லது (b) யில் சொல்லப்பட்ட நபராக இருக்கவேண்டும் 3. தற்போதைய வருமானத்தை அனுப்புதல் 3.1 என். ஆர். ஐக்கள் (NRIs) / பி.ஐ.ஓக்கள் (PIOs) ஆகியோரின் வாடகை, ஆதாயப்பங்கு, ஓய்வூதியம், வட்டி போன்ற தற்போதைய வருமானத்தை, அவர்கள் என்.ஆர்.ஓ(NRO) கணக்கு பராமரிக்கவில்லை என்றாலும் அனுப்புதல், வரிகள் செலுத்தப்பட்டு அத்தொகை அனுப்புதலுக்குத் தகுதியானது என்று பட்டயக் கணக்காளரின் சான்றிதழோடு அனுமதிக்கப்படுகிறது. 3.2. குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சா வளியினர், குடியிருப்போரல்லாதோர் (அந்நிய) ரூபாய் கணக்கிற்கு, நடப்பு வருமானத்தை வரவு வைப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கென நியமிக்கப்பட்ட வங்கி, வரவு என்பது கணக்குதாரரின் நடப்பு வருமானத்தில் வருமானவரி கழிக்கப்பட்டதா என்பதனை திருப்திபடுத்திக் கொள்ள வேண்டும் 4. இந்திய வம்சாவளியல்லாத அந்நிய நாட்டவரின் சொத்துக்களை அனுப்புதல் 4.1. இந்திய வம்சாவளியல்லாத ஒரு அந்நிய நாட்டவர் இந்தியாவில் ஒரு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவராக அல்லது இந்தியாவில் வசிக்கும் ஒருவரிடமிருந்து சொத்துக்களை வாரிசுதாரர் அடிப்படையில் பெற்றுக் கொள்ளும்பொழுதோ அல்லது இந்தியாவில் வசித்த இந்தியக் குடிமகனை மணந்து விதவையாகியிருந்தாலோ ஒரு நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மிகாமல் அனுப்பலாம். இதற்கு சொத்துக்களை கையகப்படுத்தியமை மற்றும் வாரிசுரிமை மூலம் சொத்துக்களை அடைந்தமை ஆகியவற்றுக்குச் சான்றுகள் காட்டிட வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கை எண் 10/2002, 2002 அக்டோபர் 9 தேதியிட்டதன் அடிப்படையில் பட்டயக்கணக்காளரின் சான்றிதழோடு, அனுப்புபவரின் உறுதி மொழியோடும் அனுப்பப்படுகிறது. 4.2. இத்தகைய அனுப்பு வசதிகள் நேபால் மற்றும் பூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இல்லை. 5. குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர் ஆகியோரின் சொத்துக்களை அனுப்புதல் 5.1. குடியிருப்போரல்லாத இந்தியர் / இந்திய வம்சா வளியினர், ஒரு நிதியாண்டில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை அவர்களுடைய குடியிருப்போரல்லாத (சாதாரண) கணக்கில் (NRO) இருந்தும் /சொத்துக்களை விற்றுவரும் பணத்திலிருந்தும் (வாரிசுரிமை மூலம் வரும் சொத்துக்களும் இதில் அடங்கும்) நன்னோக்கங்களுக்காக அனுப்பிடலாம். இது அங்கீகரிக்கப்பட்டு ஈடுபடும் வங்கியின் திருப்திக்கு ஏற்பவும், அனுப்புபவரின் உறுதிமொழியை பார்த்த பின்பு மற்றும் நேரடி வரிகளின் மத்திய வாரியத்தின் எண் 10/2002, அக்டோபர் 9, 2002 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி பட்டயக் கணக்காளரின் சான்றிதழோடும் இருந்திடல் வேண்டும் 5.2. குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர் ரூபாய் நிதியின் மூலம் அவர்கள் வாங்கிய அசையா சொத்துக்களை விற்று வரும் தொகையினை அனுப்பலாம் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள பத்தி 5.1ன்படி முடக்கி வைக்கும் காலம் இன்றி இந்தியாவில் வசிக்கும் நபராக அனுப்பலாம். 5.3. பரம்பரையாகவோ அல்லது வாரிசுரிமை மூலமோ அல்லது தீர்வின் மூலமோ பெற்ற சொத்துக்களை விற்று இடைவேளைக் காலம் இன்றி, குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சா வளியினர் அத்தாட்சி ஆவணங்கள், ஒப்புதல் ஆவணங்கள் மற்றும் பட்டயக் கணக்காளரின் சான்றிதழ் ஆகியவற்றை அவற்றிற்கான முறையான படிவங்களில் சமர்ப்பிக்கலாம். பெற்றோர்களிடமிருந்து வாரிசுரிமை பெறுவதும் ஒரு வகையான தீர்வு, ஒரே வேறுபாடு என்னவெனில் தீர்வுக்கு உள்ளான சொத்து, உரியவர் / பெற்றோர் இறப்பிற்குப்பின் சட்ட நடைமுறைகள் ஏதுமின்றி பயனாளிக்கு சென்றடைகிறது. இதனால் உரிமை கோரும் மனு போன்றவற்றிற்காக செலவிடும் நேரம் மற்றும் சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது. ஒரு வேளை சொத்துப்பிரிவினை, சொத்தின் மீது ஆயுட்கால பற்று இன்றி செய்யப்படுமானால் (அதாவது சொத்தின் உரிமையாளர்/பெற்றோரின் ஆயுட்காலத்தில்) அது சொத்தை பரிசளிப்பாக மாற்றிக்கொடுப்பதற்கு சமமாகும். எனவே குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர் ஒரு சொத்து பிரித்தெழுதுவதற்குப்பின் உரிமையாளர் ஆயுட்கால பற்றின்றி ஒரு சொத்தைப் பெற்றால் அந்த மாற்றம் ஒரு பரிசளிப்பு என்று ஏற்றுக்கொள்ளப்படும். குடியிருப்போர் அல்லாதோரின் சாதாரண ரூபாய் கணக்கின் அப்போது நடைமுறையில் இருக்கும் உத்தரவுகல் அச்சொத்தினை விற்று அனுப்புவதற்கான வழிகாட்டு நெறிகளாகும். 5.4 அசையாச் சொத்துக்களை விற்றுவரும் தொகையை அனுப்பும் வசதி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, சைனா, ஆப்கானிஸ்தான், ஈரான், நேபால் மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு இல்லை b. மற்ற நிதியியல் சொத்துக்களை விற்று வரும் தொகையினை அனுப்பும் வசதி பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபால் மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு இல்லை 6. குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சா வளியினர் ஆகியோர் அந்நியச் செலாவணி மூலம் வாங்கிய குடியிருப்புச் சொத்தை விற்று அனுப்பும் தொகைகள் 6.1. குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சா வளியினர் ஆகியோர் வாங்கிய குடியிருப்புச் சொத்தை விற்று கிடைக்கும் தொகை எந்த அளவிற்கு அனுமதிக்கப்படும் என்றால் வங்கிகள் வாயிலாக அந்நியச் செலாவணி மூலம் அசையாச் சொத்து வாங்க எவ்வளவு செலவழிக்கப்பட்டதோ அந்த அளவிற்கு இவ்வசதி இரண்டு சொத்துக்கள் வரை மட்டுமே. 6.2. அங்கீகரிக்கப்பட்ட முகமைவங்கிகள் தொகைகள் அனுப்புவதற்கு அனுமதி அளிக்கின்றன. அவைகள் திருப்பிக் கொடுக்கவேண்டிய விண்ணப்பக் கட்டணம்/ முன்னுறுதிப் பணம்/வீடு கட்டும் முகைமைகள் செய்துள்ள வாங்கும் முடிவுகள்/ வீடு, மனை போன்றவை ஒதுக்கப்படாத விற்பனையாளர்கள்/ முன் பதிவு செய்தவைகளை விலக்குதல்/ குடியிருப்பு/ வணிக சொத்துக்களை வாங்குதல், அவற்றிற்கான வட்டியுடன் ஏதேனும் இருந்தால் (அதில் செலுத்த வேண்டிய நிகர வருமான வரியுடன்) உண்மையான பணம் செலுத்துதல் குடியிருப்போரல்லாதோரின் அந்நிய [NRE/FCNR(B)] கணக்கிலிருந்தோ அல்லது இந்தியாவிற்கு வெளியிலிருந்து சாதாரண முறையில் வங்கிகள் வாயிலாக அனுப்புதலோ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனை வங்கி, அந்த நடவடிக்கையின் நியாயத்தன்மையில் திருப்தியடையும் பட்சத்திலாகும். அவர்கள் விருப்பப்படும்பட்சத்தில் அந்த நிதி NRE/FCNR(B) கணக்கில் வரவு வைக்கப்படும். 6.3. அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனை வங்கிகள் தங்களது சொத்துக்களை விற்று குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர் ஆகியோர் அத்தாட்சியளிக்கப்பட்ட பரிவர்த்தனை வங்கிகள்/ வீட்டு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து பெற்ற கடனை தங்களுக்கு அந்நிய நாட்டிலிருந்து வந்த தொகைகளைக் கொண்டு கடனை அடைத்தபிறகு மீதமுள்ள தொகையை அனுப்ப அனுமதிக்கலாம் அல்லது தங்களது NRE/FCNR(B) கணக்குகளில் பற்று வைக்கலாம். 7 மாணவர்களுக்கான வசதிகள் 7 1. வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் குடியிருப்போர் அல்லாத இந்தியர்களாக கருதப்பட்டு அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (Foreign Exchange Management Act –FEMA) கீழ் என்.ஆர்.ஐ.க்கு உள்ள அத்தனை வசதிகளும் கிடைக்கும் 7.2. குடியிருப்போர் அல்லாதோர் என்ற முறையில் இந்தியாவிலிருந்து அனுப்புதலைப் பெற கீழ்க்கண்டவாறு தகுதியுள்ளது (i) தங்களது கல்விக்கான அனுப்புதல் உட்பட தங்களது பராமரிப்புக்காக சுய அறிவிப்பின்மூலம் இந்தியாவில் உள்ள தங்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்து 1,00,000 அமெரிக்க டாலர்கள் வரை. (ii) இந்தியாவில் உள்ள அதிகாரமளிக்கப்பட்ட பரிவர்த்தனை வங்கியில் அவர்களுக்கு உள்ள கணக்கில் சொத்துக்களை விற்று வரும் தொகையிலிருந்து ஒரு நிதியாண்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை 7.3. FEMAவின்கீழ் என்.ஆர்.ஐ.க்களுக்கு உள்ள அனைத்து மற்ற வசதிகளும், மாணவர்களுக்கும் உண்டு 7.4. இந்தியாவில் வசிக்கும்போது அவர்கள் பெற்ற கல்வி மற்றும் இதர கடன்கள் FEMAவின் விதிகளுக்கு உட்பட்டு தொடர்ந்து கிடைக்கும் 8. வருமான வரி தீர்வு அதிகாரமளிக்கப்பட்ட பரிவர்த்தனை வங்கிகள் மூலம் அனுப்புதல்கள் அனுமதிக்கப்படமுடியும். இதற்கு அனுப்புபவரின் உறுதிமொழி மற்றும் பட்டயக் கணக்காளரின் சான்றிதழும் தேவைப்படும். இச்சான்றிதழின் வடிவம் இந்திய அரசாங்கத்தின் நிதியமைச்சகத்தின் நேரடி வரிகளின் மத்திய வாரியத்தின் சுற்றறிக்கை எண் 10/2002, 2002 அக்டோபர் 9 தேதியிட்டது (cf. A.P. (DIR வரிசை) சுற்றறிக்கை எண் 56, 2002 நவம்பர் 26 தேதியிட்டதில் உள்ளது. 9. சர்வதேச கடன் அட்டைகள் அதிகாரமளிக்கப்பட்ட பரிவர்த்தனை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி என்.ஆர்.ஐ.க்கள்/ பி.ஐ.ஓ.க்களுக்கு சர்வதேச கடன் அட்டைகளை வழங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பரிவர்த்தனைகள் உள்முக அனுப்புதல் மூலமோ அல்லது அட்டைதாரரின் எஃப்.சி.என்.ஆர்(பி)/ என்.ஆர்.இ./ என்.ஆர்.ஓ. கணக்குகளில் உள்ள நிலுவைகளின் மூலமோ தீர்வு செய்யப்படலாம். இணைப்பு 1 குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர்/அயல் நாட்டவர் அனுப்பீடு வசதிகளின் விபரங்களடங்கியத் தொகுப்புச் சுற்றறிக்கை
இணைப்பு 2 குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர்/அயல் நாட்டவர் அனுப்பீடு வசதிகளின் விபரங்களடங்கியத் தொகுப்புச் சுற்றறிக்கை அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகளுக்கான செயல்முறை உத்தரவுகள் 1. பொது: 1.1.அந்நியச் செலாவணி நிர்வாக சட்டம் 1999ன்கீழ் உள்ள சட்டத்தின் ஷரத்துகள்/ ஒழுங்குமுறைகள்/ வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் கவனமாகப் படிக்க வேண்டும். 1.2.பல்வேறு பரிவர்த்தனைகளின் அனுப்புதல்களை அனுமதிக்கும் அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள் பற்றி ரிசர்வ் வங்கி பரிந்துரைக்காது. 1.3. சட்டத்தின் பிரிவு 10ன் உட்பிரிவுகள் 5ன் ஷரத்துக்களின்படி எந்த ஒரு நபர் சார்பாகவும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது அங்கீகரிக்கப்பட்ட முகவர் யார் சார்பாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறதோ அவரிடமிருந்து ஒரு உறுதிமொழியையும் மற்றும் சில தகவல்களையும் பெறவேண்டும். இதன்படி சட்டத்தின்கீழ் உள்ள ஷரத்துக்களை மீறவோ, முரண்படவோ இல்லை என்பதனை அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் உறுதி செய்துகொள்ளவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் விண்ணப்பதாரரிடமிருந்து பெற்ற தகவல்கள்/ஆவணங்கள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி பரிவர்த்தனைகளை சரி பார்ப்பதற்கு முன்வரை பாதுகாத்திடவேண்டும். 1.4.யார் சார்பாக பரிவர்த்தனை நடத்தப்படுகிறதோ, அவர் அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகயின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தால் அது பற்றி அவர் எழுத்து பூர்வமாக மறுப்பைத் தெரிவிக்க வேண்டும். சட்டம் மீறப்படுவதாலோ, முரண்பட்டு நடப்பதாலோ, விதிகள் அல்லது ஒழுங்குமுறைகள் அல்லது வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் இவற்றுக்கு மாறாக உள்ளது என்று ஒரு பரிவர்த்தனையை, அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கி மறுக்கும்பொழுது, அதனை ரிசர்வ் வங்கி தெரியப்படுத்தவேண்டும். 1.5. சமச்சீரான நடைமுறைகளை பராமரிக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் சட்டத்தின் பிரிவு 10ன் உட்பிரிவு (5)ன் ஷரத்துக்களை கடைபிடிப்பதை உறுதிசெய்யவும் கிளைகளிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் ஆவணங்கள் அல்லது தேவையானவற்றை பெறும். 2. நடப்பு வருமானத்தை அனுப்புதல் 2.1 வாடகை, ஆதாயப்பங்கு, ஓய்வூதியம், வட்டி ஆகியவை போன்ற நடப்பு வருமானம் இந்தியாவிற்கு வெளியே ஒரு கணக்குதாரரால் அனுப்பப்படுவது குடியிருப்போர் அல்லாதோரின் சாதாரண ரூபாய் கணக்கிற்கு பற்று என்பது அனுமதிக்கப்படுகிறது 2.2 குடியிருப்போர் அல்லாதோரின் சாதாரண ரூபாய் கணக்கு இல்லாத குடியிருப்போர் அல்லாத இந்தியர்களின் வாடகை, ஆதாயப் பங்கு, ஓய்வூதியம், வட்டி போன்ற நடப்பு வருமானத்தை அனுப்புதலை அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் கீழ்க்கண்ட முறையில் அனுமதிக்கிறது. அதாவது, அனுப்பும் தொகை அதற்குரிய தகுதிபெற்றது என்றும், உரிய வரி செலுத்தப்பட்டுவிட்டது என்றும், ஒரு பட்டயக்கணக்காளர் பொருத்தமான சான்றிதழை வழங்கிய பிறகு அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்படும். 3. வரையறைகள்
4. வரிகட்டுதலைக் கடைப்பிடித்தல் மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய நிதியமைச்சகம், இந்திய அரசு அதன் சுற்றறிக்கை எண் 10/2002 அக்டோபர் 9, 2002 தேதியிட்ட (cf.A.P.(DIR வரிசை) 2002 நவம்பர் 26, தேதியிட்ட சுற்றறிக்கை எண் 56 பரிந்துரைப்படியான படிவங்களில் பட்டயக் கணக்காளரிடமிருந்து பெற்ற சான்றிதழ் மற்றும் அனுப்புபவரின் உறுதிமொழி ஆகியவற்றை அளித்தால் குடியிருப்போர் அல்லாதோருக்கு அனுப்புவதற்கான அனுமதியை அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் அளிக்கலாம். பிற்சேர்க்கை குடியிருப்போரல்லாத இந்தியர்/இந்திய வம்சாவளியினர்/அயல் நாட்டவர் அனுப்பீடு வசதிகளின் விபரங்களடங்கியத் தொகுப்புச் சுற்றறிக்கையில் ஒன்றுசேர்க்கப்பட்ட சுற்றறிக்கைகளின்/அறிக்கைகளின் பட்டியல்
குறிப்பு:
|