முதன்மைவழிகாட்டுதல் - உங்கள்வாடிக்கையாளரை அறிவீர் (KYC) வழிகாட்டுதல், 2016 - ஆர்பிஐ - Reserve Bank of India
முதன்மைவழிகாட்டுதல் - உங்கள்வாடிக்கையாளரை அறிவீர் (KYC) வழிகாட்டுதல், 2016
RBI/DBR/2015-16/18 பிப்ரவரி 25, 2016 முதன்மைவழிகாட்டுதல் - உங்கள்வாடிக்கையாளரை பணச்சலவை தடுப்புச்சட்டம் 2002, பணச்சலவை தடுப்பு விதிகள் (பதிவேடுகள் பராமரிப்பு) 2005, (அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்டது) மற்றும் அரசால் புதுப்பிக்கப்பட்ட ஆதார் மற்றும் இதர சட்ட (திருத்தப்பட்டது) மேலாணை 2019, ஆகியவற்றில் உள்ள ஷரத்துக்களின் படி கீழே குறிப்பிடப்பட்ட நடைமுறைகளை, ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகள் பின்பற்றுவது அவசியமாகும். ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகள், தங்களிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுடன் அந்த கணக்குகளின் அடிப்படையிலோ அல்லது வேறுவிதமாகவோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அவர்களின் அடையாளங்களை அறிந்துகொள்ளவும், கண்காணிக்கவும், சில நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள், விதிகள், மேலும் அவற்றைத் தொடர்ந்து வெளியிடப்படும் செயல்பாட்டு அறிவுறுத்தல்கள், திருத்தங்கள் ஆகியவற்றை, ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகள் நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். 2. அதன்படி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் சட்டப்பிரிவு 35A (மற்றும் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம், பணச்சலவை (பதிவேடுகள் பராமரிப்பு) தடுப்பு விதிகள் 2005-ன் விதி 9 (14) உடன் சேர்த்துப்படிக்க) மற்றும் இதர சட்டங்களில் கொடுக்கப்-பட்டுள்ள அதிகாரத்தைப் பிரயோகிக்கும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஏதுவாக அமைந்த விதத்தில், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இது தேவை என்பதில் திருப்தியடைந்து, இந்திய ரிசர்வ் வங்கி பின்வரும் வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது. (பியூஷ் கோயல்) |