தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்பு 30 கிராம் உலோகத் தங்கம் - ஆர்பிஐ - Reserve Bank of India
தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்பு 30 கிராம் உலோகத் தங்கம்
நவம்பர் 03, 2015 தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்பு தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015-ன் வழிகாட்டுதலின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி குறைந்தபட்ச தங்க வைப்பைத் திருத்தியமைத்துள்ளது. இதன்படி, ஒரு நேரத்தில் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் குறைந்தபட்ச முதலீடு உலோகத் தங்கம் 30 கிராம் {கட்டிகள், நாணயங்கள் நகைகள் (கல், இதர உலோகம் நீங்கலாக)} அளவில் இருக்கலாம். 995 புள்ளிகள் தூய்மையான உலோகத் தங்கம் 30 கிராம் என்று கூறும்போது, பொதுமக்களின், ஆபரணங்கள் இதர தங்கக் கட்டிகளின் தூய்மை வெவ்வேறு நிலைகளில் இருக்குமாதலால், அவற்றை நிர்ணயித்து அறிந்து கொள்வது கடினம் என்று முறையிடப்பட்டது. ஆகவே, இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015-ன் கீழ் அக்டோபர் 22, 2015 வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல் பிரிவு 2.1.2-ஐ திருத்தியமைத்து வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட முக்கிய வழிகாட்டுதல் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் நவம்பர் 05, 2015 முதல் அமலாக்கம் செய்யப்படும். அல்பனா கில்லவாலா பத்திரிக்கை வெளியீடு: 2015-2016/1071 |