வங்கி நோட்டுகளை தவறுதலாக கையாளுதல்
RBI/2007-08/183 நவம்பர் 12,2007 தலைமை நிர்வாக அதிகாரி அன்புடையீர், வங்கி நோட்டுகளை தவறுதலாக கையாளுதல் வங்கி நோட்டுகளை தவறாகக் கையாளுவது மற்றும் நோட்டுகளில் ‘பின்’ அடிப்பது இவை பற்றி வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949(AACS)ன் பிரிவு 35Aன்கீழ் UBD.No.Dir.2/13.01.00/2001-2002, ஜனவரி 9, 2002 தேதியிட்ட சுற்றறிக்கையின் வாயிலாக அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் அளிக்கப்பட்ட சுற்றறிக்கையைப் பார்க்கவும். 2. வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதரபிரிவினர் தொடர்ந்து வங்கி நோட்டுகளின்மேல் எழுதி வருவது வங்கியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய பழக்கங்கள் வங்கியின் சுத்தநோட்டுக் கொள்கைக்கு எதிரானது என்பதனை வங்கி வலியுறுத்துகிறது. எனவே எதுவாக இருந்தாலும் நோட்டுகளின் மேல் எழுதுவதை தவிர்க்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் இவ்விஷயமாக தங்களது பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய அளவு கற்பிக்க முயல வேண்டும். 3. மண்டல அலுவலகங்கள் பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.தங்கள் உண்மையுள்ள (A.K.கவுண்ட்) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: