நேஷனல் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் - அபராதம் விதிக்கப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
நேஷனல் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் - அபராதம் விதிக்கப்பட்டது
தேதி: செப்டம்பர் 18, 2018 நேஷனல் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் - அபராதம் விதிக்கப்பட்டது இந்திய ரிசர்வ் வங்கி நேஷனல் அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச்சின் மீது வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 46 (4) உடன் (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும் வகையில்) பிரிவு 47 A (1) விதிமுறைகளின் கீழ், ரிடர்ன்களை தொடர்ந்து சமர்ப்பிக்காததற்காக, மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 27 இன் கீழ் ₹2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்கும் அறிவிப்பை வங்கிக்கு வழங்கியது. அதற்கு வங்கி தனது பதிலை சமர்ப்பிக்கவில்லை. உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், வங்கியின் விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்ற முடிவுக்கு வந்து அபராதம் விதிக்க தேவை என்ற முடிவுக்கு வந்தது. அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/646 |