இந்தியாவில் வாழ்வோருக்கு அன்னிய நாணயக் கணக்கு தொடர்பான புது வசதிகள்
இப்போது இந்தியாவில் வாழ்வோர் 2000 அமெரிக்க டாலர் அல்லது அதற்குச் சமமான பணத்தை தன்வசம் வைத்துக் கொள்ளலாம். அத்துடன்/அல்லது அவரால் பெறப்பட்ட காசோலைகள் வைத்திருக்கலாம்.
(i) இந்தியாவிற்கு வெளியே எவ்விடத்திற்குச் சென்றாலும் கட்டணச் சேவை
(ii) இந்தியாவில் வாழ்வோரல்லாத எந்த நபரானாலும் சட்டப்படியான கடமைகளை நிறைவேற்ற இந்தியாவிற்கு வருவது
(iii) இந்தியாவிக்கு வெளியே செல்லும்போது மதிப்பூதியம் (அ) பரிசு வழங்கல்
(iv) வெளிநாடு செல்லும் அங்கீகரிக்கப்பட்ட நபரின் செலவாகாத பணக்கைத் திருபச் செலுத்தல்
இந்தியாவில் வாழும் தனிநபருக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வசதிகளை மேலும் தாராளமாக்கும் முயற்சியை ஒரு முக்கிய படிநிலை நடவடிக்கையாக இந்தியாவில் வாழும் நபருக்கு இந்தியாவில் உள்ள உரிமம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட வணிகராகச் செயல்படும் வங்கி ஒன்றில் அன்னியச் செலாவணிக் கணக்கு ஒன்றினைத் தொடங்கிச் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு இந்தியாவில் வாழ்வோர் அந்நியச்செலாவணி(உள்நாடு) கணக்கு (இ.வா.அ.செ.க-R.F.C.) என அழைக்கப்படும். மேலே குறிப்பிட்ட (i), (iv) பிரிவுகளின் ஆதாரப்படி கிடைக்கப் பெறும் அந்நியச் செலாவணியை இந்தியாவில் வாழ்வோர் இந்தக் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.
இதுவரையில் மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் வழி பெறப்பட்ட அந்நியச் செலாவணியை 2000 அமெரிக்க டாலருக்கு மிகுதியெனில் அதனை ஒப்படைத்து அத்தொகையை ரூபாயாக மாற்றிப் பெறவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தப் புது வசதியின் காரணமாக இந்தியாவில் வாழ்மோர் தங்களுக்குக் கிடைத்த அந்நியச் செலாவணியை இ வா அ செ கணக்கில் எந்த அந்நிய நாணயத்தையும் செலுத்தலாம் அல்லது அவர்கள் அதனை ரூபாயாக மாற்றியும் அவர்களது கணக்கில் செலுத்தலாம். இந்தப் புதுவசதியான இ.வா.அ.செ. கணக்கு 2000 அமெரிக்க டாலர் அல்லது அதற்குச் சமமான பணத்தாள்கள் அத்துடன் அந்நியச் செலாவணி, பயணியர் காசோலை ஆகியவற்றை வைத்துக் கொள்ளும் வசதியைக் காட்டிலும் கூடுதலானது.
இக்கணக்கின் இருப்புத் தொகையை இப்போது அந்நியச் செலாவணி விதிமுறைகலுக்கேற்ப இந்தியாவில் வாழ்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். (எ.கா. வெசிநாட்டில் மருத்துவம், அமெரிக்க டாலர் 5000 வரை பரிசாகத் தருதல், நேரடியாக அல்லது இணையம் மூலமாகவோ நூல்கள் வாங்குதல், வெளிநாட்டில் கல்வி இன்ன பிற வசதிகள்).
மேலே குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப அந்நியச் செலாவணி பெறப்படுமெனில் இ.வா.அ.செ. கணக்கில் உள்ள இருப்புத்தொகைக்கு உச்ச வரம்பு எதுவுமில்லை. இந்தக் கணக்கு காசோலை வசதியுடன் ஒரு நடப்புக் கணக்காகக் கருதப்படும். அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை விதிகளில் ஏற்படுத்தப்பதும் திருத்தங்கள் குறித்து அவ்வப்போது தனித்தனி அறிவிப்புகள் அனுப்பபடுகின்றன.
இந்தப் புதுவசதியின் செயல்பாடு ஓராண்துக்குப்பின் மறு ஆய்வு செய்யப்படும். உண்மையான அனுபத்தின் அடிப்படையில் இச்செயல் திட்டம் மேலும் திருத்தியமைக்கப்படும்/தாராளமாக்கப்படும்.
பி.வி.சநான்ந்தன்
மேலாளர்
பத்திரிகை வெளியீடு-2002-2003/462
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: