RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78441715

தனிநபர் வைப்புக்கணக்குகளில் வாரிசுதாரர் நியமன வசதி

RBI/2006-07/310

 

DBOD.No.Leg.BC.75/09.07.005/2006-07                          ஏப்ரல் 5, 2007

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்

(வட்டார கிராமிய வங்கிகள் தவிர)

 

அன்புடையீர்,

 

தனிநபர் வைப்புக்கணக்குகளில் வாரிசுதாரர் நியமன வசதி

 

மேற்கண்ட விஷயங்குறித்து, ஜுன் 9, 2005 தேதியிட்ட சுற்றறிக்கை எண். DBOD.No.BC. 95/09.07.005/2004-05ன் பாரா 9ஐ தயவுசெய்து பார்வையிடுக. அதன்படி வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூட்டுக்கணக்கில் ஒருவர் இறந்தபின், உயிருடனிருக்கும் மற்றவர் சேமிப்பைப் பெற வசதி உள்ளதையும், தனியொருவர் வைத்திருக்கும் கணக்கில் வாரிசுதாரரை நியமனம் செய்யும் வசதி உள்ளதையும் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு வழிகாட்டும்பொருட்டு பெருவாரியாய் விளம்பரம் செய்து அறிவிக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப் படுகின்றன.  இவ்விஷயத்தில் எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டும், வங்கிகள் வாரிசுதாரர் குறிப்பிடப்படாத தனிநபர் கணக்குகளை ஆரம்பிக்கக்கூடும்.

2. அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது மதிப்பிற்குரிய அம்மன்றம் பின்வரும் கருத்தினை அளித்தது.  “சேமிப்புக்கணக்கினை ஆரம்பிக்கும்போது, தனிநபரொருவர் தனியொரு பெயரில் வங்கிக்கணக்கை ஆரம்பிக்க விழைந்தால், அவர் வாரிசுதாரர் பெயரை அளிக்காவிடில், வங்கிக்கணக்கினைத் தொடங்க மறுக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்துவது மிகப்பொருத்தமான ஒன்றாகும்.  இதனால் குற்றமற்ற விதவைகள் மற்றும் குழந்தைகள் சட்டப்படி தங்களுக்குச் சேர வேண்டிய தொகையைப்பெறுவதற்காக நீண்டகாலமாகிற அலைச்சல் தருகிற, நீதிமன்ற வழக்குசார்ந்த விவகாரங்களில் சிக்கி அல்லலுறுவது தவிர்க்கப்படும்”.

3.  மேற்குறிப்பிட்டவற்றை கவனத்தில் கொண்டு தனிநபரொருவர் சேமிப்புக்கணக்கு ஆரம்பிக்கும்போது வாரிசுதாரரை நியமிக்க வேண்டியதைப் பொதுவாக வங்கிகள் கட்டாயமாக்கவேண்டும்.  அவர் அவ்வாறு செய்யமறுத்தால் அதிலுள்ள வசதிகளை அவருக்கு எடுத்துரைக்க வேண்டும். அப்படியும் அந்த நபர் வாரிசுதாரரை நியமிக்கமறுத்தால் வங்கி அதனைக் குறிப்பிட்டு அவர் விரும்பாததை குறிப்பாக எடுத்துக்காட்டும்படி ஒரு கடிதத்தையும் அவர் தரமறுத்தால், அதை வங்கி தனது ஏட்டில் பதிவு செய்து கொண்டு, மற்றபடி தகுதியிருப்பின் அவருக்கு கணக்கினை ஆரம்பித்துத்தரலாம்.  எந்த ஒரு சூழ்நிலையிலும், ஒருநபர் வாரிசுதாரரை நியமிக்க மறுக்கும் ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க வங்கி மறுத்திடக் கூடாது.

4. மேலும் வங்கிகள் நமது சுற்றறிக்கை எண் DBOD.No.BC.15/09.08.004/96-97 பெப்ரவரி 28, 1997 தேதியிட்டதைப் பார்வையிடுக.  அதன்படி தனிநபர் நடத்தும் வணிகநிறுவனக் கணக்குகளிலும் வாரிசுதாரர் நியமிக்கும் வசதி அளிக்கப்படலாம்.  இவ்வாறு தனிநபர் நடத்தும் வணிகநிறுவனத்தின் சேமிப்புக் கணக்கில் வாரிசுதாரர் நியமிக்கப்படும்போது மேற்கண்ட செயல்முறையை பின்பற்றுமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.

 

தங்கள் உண்மையுள்ள

 

 

(பிரஷான்ந்த் ஷர்மா)

தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)    

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?