500 ரூபாய் நோட்டை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல் - ஆர்பிஐ - Reserve Bank of India
500 ரூபாய் நோட்டை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல்
DCM.300/08.04.21/2000-2001
ஜன்வரி 05, 2001
தலைவர்
வணிக வங்கிகள்/கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்,
500 ரூபாய் நோட்டை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல்
சில வங்கிகள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்காமலும், அப்படியே வாங்கினாலும் நோட்டுகளின் வரிசை எண்களைக் குறித்துக் கொண்டுதான் வாங்குகின்றதாகவும் நாங்கள் அறிகிறோம்.
2. 1998ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் நாளிட்ட எங்களது கடித எண் DCM No.927/08.06.01/97-98ஐ நினைவு கூர்ந்து, ரிசர்வ் வங்கி பல்வேறு காலகட்டங்களில் வெளியிட்ட அனைத்து 500 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும். என்வே அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் இவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
3. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபித்திய விளம்பரத்தை நினைவு படுத்த வேண்டும். நீர்க்குறியீட்டில் அசோகாத் தூண் முத்திரை உள்ள பச்சை வண்ண 500 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிதாக வெளியிட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகளைப் பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பொது மக்கள் பழைய வடிவமைப்பு நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவமைப்பு நோட்டுக்ளைப் பெற ஒரு வசதிதான். இது வங்கிகள் பழைய நோட்டுகளை வாங்க மறுக்க இதனையே காரணமாகக் காட்டக் கூடாது.
4. எனவே தங்களது அனைத்துக் கிளைகளுக்கும் பழைய 500 ரூபாய் நோட்டுகளை தங்கு தடையின்றி பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வசதியாக தேவையான அறிவுறைகளை வழங்க வேண்டும். மக்கள் மனதில் தோன்றியுள்ள அச்சத்தை அறவே அகற்றும் வகையில் மக்களிடமிருந்து ப்ழைய நோட்டுகளை அனைத்து வங்கிக் கிளைகளும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
5. கிடைத்தமைக்குப் ஓப்புதல் அனுப்புக.
அன்புடன்
சி. கிருஷ்ணன்
தலைமைப் பொது மேலாளர்