2004 மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் - குடியிருப்போர் அல்லாத இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் வாரிசு நியமனம் - ஆர்பிஐ - Reserve Bank of India
2004 மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் - குடியிருப்போர் அல்லாத இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் வாரிசு நியமனம்
RBI/2006-07/217
DGBA.CDD.No.H.10024/15.15.011/2006-07
டிசம்பர் 22, 2006
பொது மேலாளர்
அரசுக்கணக்குத் துறை – தலைமை அலுவலகம்
பாரத, இந்தூர், பாட்டியாலா, பிக்கனர் & ஜெய்பூர்
செளராஷ்ட்ரா, திருவாங்கூர், ஹைதராபாத், மைசூர், ஸ்டேட் வங்கிகள்
அலாகபாத், பரோடா, மஹாராஸ்ட்ரா, கனரா, சென்ட்ரல்,
கார்ப்பரேஷ்ன், தேனா, இந்தியன், இந்தியன் ஓவர்சீஸ்,
பஞ்சாப் நேஷ்னல், சிண்டிகேட், யூகோ, யூனியன்,
யூனைடட், விஜயா, ஐசிஐசிஐ வங்கிகள், பாங் ஆப் இந்தியா.
அன்புடையீர்,
2004 மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் - குடியிருப்போர் அல்லாத இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் வாரிசு நியமனம்
2006 ஜூன் 28 தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கை RBI/2005-01/431 எண் DGBA.CDD.No.H.20692/15.15.001/2005-06ஐப் பார்க்கவும். இந்திய வம்சாவளியினர் அட்டை வைத்திருப்போர் இத்திட்டத்தில் முதலீடு செய்யவும், அவர்களை வாரிசாக நியமிக்கவும் சம்பந்தமாக சில விளக்கங்களைக் கூறியிருந்தோம்.
2.இந்திய அரசின் பொருளாதாரத் துறை பட்ஜெட் பிரிவு கடித எண் F.15/8/2005/NS-II/Vol.II தேதி டிசம்பர் 14, 2006 இன் படி குடியிருப்போர் அல்லாத இந்தியரும், இந்தியா மற்றும் வேறொரு நாட்டுக்குடியிரிமை என இரு குடியுரிமை உள்ளோரையும் இத்திட்டத்தின் கீழ் வாரிசாக நியமனம் செய்யலாம். ஆனால் வைப்புதாரர் இறந்துவிட்டால் இத்தகைய வாரிசுகள் இக்கணக்கைத் தொடர முடியாது. இக்கணக்கில் இருக்கும் பணத்தையும் வெளிநாட்டிற்கு எடுத்துச் செய்ய முடியாது.
3.உங்கள் கிளைகளுக்கெல்லாம் இச்சுற்றறிக்கையின் விபரங்களைத் தெரியப்படுத்தி நடைமுறைப்படுத்த ஆவண செய்யவும்.
4.கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்க.
நம்பிக்கையுள்ள
K. பாலு
பொது மேலாளர்