சிறுகடன் கணக்குகள் ஒரே ஒப்பந்தத்தீர்வு மற்றும் புதிய கடனுக்கானத் தகுதி - ஆர்பிஐ - Reserve Bank of India
சிறுகடன் கணக்குகள் ஒரே ஒப்பந்தத்தீர்வு மற்றும் புதிய கடனுக்கானத் தகுதி
RBI /2005-06/241
RPCD.PLNFS.BC.No.56/06.02.31/2005-06 டிசம்பர் 27, 2005
அட்டவணையிலுள்ள அனைத்து வணிக வங்கிகளின்
(பிராந்தியக் கிராம வங்கிகள், உள்ளுர் வங்கிகள் உட்பட)
தலைவர்கள்/நிர்வாக இயக்குநர்கள்
அன்புடையீர்,
சிறுகடன் கணக்குகள் ஒரே ஒப்பந்தத்தீர்வு
மற்றும் புதிய கடனுக்கானத் தகுதி
வருமானம் ஈட்டா கணக்காகிப் போன வங்கி கணக்கினைத் தீர்த்திடவும், புதிதாகக் கடன் பெறவும் சிறிய கடனாளிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வங்கித் தொகை(முதல்) ரூ.25,000க்கு கீழும், அவை நட்டமளிக்கும் சொத்தாக 30 செப்டம்பர் 2005ல் அறிவிக்கப்பட்டதாகவும் இருந்தால், எளிய வழிமுறையில், ஒரே தடவையில் அதைப் பட்டுவாடா செய்திட அனைத்து வணிக வங்கிகள் (பிராந்தியக் கிராம வங்கிகள், உள்ளுர் வங்கிகள் உட்பட) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2. அரசு அதரவளிக்கும் திட்டங்கள் சார்ந்த கடன்களைப் பொறுத்தமட்டில், மாநில அளவிலான வங்கிகள் குழுமம் வடித்துத் தரும், மாநிலத்திற்கே பிரத்யேகமான அணுகுமுறையைப் பின்பற்றி தனிப்பட்ட வழிகாட்டுதல்களை வங்கிகள் அமைத்துக் கொள்ளலாம்.
3. ஆயினும் இந்தச் செயலமைப்புத் திட்டம், மோசடிகள் மற்றும் நெறிபிறழ்வுகளுக்குப் பொருந்தாது.
4. இத்திட்டத்தின் கீழ் கடன் தீர்க்கப்படும் கடனாளிகள் புதிய கடன் பெறுவதற்கு முழுவதும் தகுதியுடையவர்கள் ஆவர்.
5. தகுதியான திட்டம் வகுத்தோ/நடவடிக்கைகள் துவக்கியோ, வங்கிகள் இதை செயல்முறைப்படுத்தலாம்.
6. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
தங்கள் உண்மையுள்ள
G. ஸ்ரீனிவாசன்
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)