RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78463441

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டம் (IGNOAPS) பயனாளிகளுக்காக கணக்கு தொடங்கி இயக்குதல்

RBI/2010-2011/253
RPCD.CO.FID.BC.No. /12.01.012/2010-11

நவம்பர் 1, 2010

அனைத்து பட்டியலிடப்பட்ட வங்கிகளின்(ஊரக வங்கிகள் உட்பட)
தலைமை மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

அன்புடையீர்,

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டம் (IGNOAPS)
பயனாளிகளுக்காக கணக்கு தொடங்கி இயக்குதல்

முதியோருக்கான தேசியக் கொள்கை கமிட்டியின் 4வது பரிசீலனைக் கூட்டத்தில் முதியோருக்கு நேயமிக்க ஒரு கொள்கை தேவை என்பதை கமிட்டி வலியுறுத்திப் பேசியது எனவும்  அத்துடன் மக்களில் இந்தப் பிரிவினருக்காக போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்ய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டத்தின் பயனாளிகளுடைய வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படவேண்டுமென்பது கமிட்டியின் முடிவுகளில் ஒன்றாகும்.

2. அதன்படி இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டத்தின் பயனாளிகள் வங்கிக்கணக்குகளைத் தொடங்கிடும்படி உங்களின் கிளைகளுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டுகிறோம்.  இதனால் பயனாளிகள் கணக்கில் இந்திய அரசு பணத்தை நேரடியாக வரவு வைத்திட இது ஏதுவாகும்.

தங்கள் உண்மையுள்ள

(டாக். தீபாலி பண்ட் ஜோஷி
தலைமைப்பொது மேலாளர் பொறுப்பு

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?