சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பது - ஆர்பிஐ - Reserve Bank of India
சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பது
RBI/2005-06/399
RPCD.CO.RF.SC.NO.87/07.38.01/2005-06 ஜூன் 6, 2006
அனைத்து மாநில, மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கிகளுக்கும்
அன்புடையீர்
சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு
சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பது
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் செயல்முறைகளையும் நிறைவேற்றிட கொடை மற்றும் மானியம் பெறுவதை ஏற்றிட சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வங்கிகளில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்திட அரசுத்துறைகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அந்தந்த அரசுத் துறைகளின் இசைவாணைக் கடிதம் கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி RPCD.NO.RF.DIR.BC.30/07.38.01/2000-01 அக்டோபர் 17ம் தேதி 2000ன் சுற்றறிக்கையில் பார்க்கவும்.
2. மேற்கண்ட விஷயத்தை பரிசீலித்த பிறகு, மாநில அரசின் பல்வேறு திட்டங்களையும் செயல்முறைகளையும் நிறிவேற்றிட கொடை மற்றும் மானியம் பெறுவதை ஏற்றிட சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வாங்கிகளில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்திட அனுமதி அளிக்கலாம். அதற்கு அவர்கள் அந்தந்த துறைகளிடமிருந்து சேமிப்பு கணக்கு தொடங்க அனுமதிக்கும் அத்தாட்சிச் சான்றிதழ் கொண்டுவர வேண்டும். அதற்தேற்ப எங்களின் உத்தரவு RPCD.NO.DIR.BC.29/07.38.01/2000-01 2000ம் ஆண்டு அக்டோபர் 17 தேதியிட்டதில் பகுதி 5(ii)(G) இதோடு பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது, திருத்தம் செய்யப்படுகிறது.
3. திருத்தம் பற்றிய உத்தரவு RPCD.RF.DIR.5516/07.38.01/2005-06 ஜூன் 6ம் தேதி 2006 இணைக்கப்பட்டுள்ளது.
பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
உங்கள் நம்பிக்கைக்குரிய
ஜி. ஸ்ரீனிவாசன்
தலைமை பொது மேலாளர்
RPCD.RF.DIR.5516/07.38.01/2005-06
சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு
சேமிப்பு கணக்கு ஆரம்பிப்பது
வங்கி கட்டுப்பாட்டு சட்டம் 1949 பிரிவு 35அ மற்றும் 21 அளிக்கும் அதிகாரங்களின்படி (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்படியான) மாற்றம் செய்யப்பட்ட RPCD.NO.RF.DIR.BC.29/07.38.01/2000-01 அக்டோபர் 17ம் தேதியிட்ட 2000 கட்டளை ரிசர்வ் வங்கி பொது நல நோக்கில் அவசியம் மற்றும் அவசரம் என்று கருதும் பட்சத்தில் பத்தி 5ன் பகுதி(II)(g) கீழ்க்கண்டவாறு மாற்றீடு செய்யப்பட்டு உடனடி அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆதரவில் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் செயல் முறைகளையும் நிறைவேற்றிட அரசின் பல்வேறு துறைகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், கொடை மற்றும் மானியம் பெற்றிட முறையான அத்தட்சியுடன் வரும்பொழுது செமிப்பு கணக்கு தொடங்க அனுமதிக்கலாம்.
RPCD.NO.RF.DIR.BC.53/D-187/88 நவம்பர் 2 தேதியிட்ட 1987 கட்டளையின் மற்ற அனைத்து ஷரத்துகளிலும் எந்த மாற்றமும் இல்லை.
(V. தாஸ்)
செயல் இயக்குனர்