RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78472562

இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் வருமானவரித் தொகையை முன்கூட்டியே செலுத்துங்கள்

நவம்பர் 13, 2015

இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் வருமானவரித் தொகையை முன்கூட்டியே செலுத்துங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி, வருமான வரி செலுத்துவோரை, கடைசி நாளுக்கு முன்னதாகவே செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறது. மேலும் அது வருமான வரி செலுத்துவோர் தேர்ந்தெடுக்கப்பட்ட முகவர் வங்கிக் கிளைகள் அல்லது அவை அளிக்கும் இணையதளம் மூலம் வரி செலுத்தும் வசதிகள் போன்ற மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறது. பொதுமக்கள் தேவையின்றி அதிகநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியது இதனால் தவிர்க்கப்படும்.

டிசம்பர் மாதக் கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது தெரியவருகிறது. இதன் பொருட்டு, முடிந்த அளவில் கூடுதல் முகப்புகள் அமைக்கப்பட்ட போதிலும், செலுத்தப்படும் வரிப் பணத்திற்கான ரசீதுகளை அளிப்பதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது வங்கிக்கு சிரமமாகவே உள்ளது.

செலுத்தப்படும் வருமான வரித் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு இருபத்தொன்பது முகவர் வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

1. அலகாபாத் வங்கி 16. சின்டிகேட் வங்கி
2. ஆந்திரா வங்கி 17. யூகோ வங்கி
3. பாங்க் ஆஃப் பரோடா 18. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
4. பாங்க் ஆஃப் இந்தியா 19. யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா
5. பாங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா 20. விஜயா வங்கி
6. கனரா வங்கி 21. பாரத ஸ்டேட் வங்கி
7. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா 22. ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர்
8. கார்ப்போரேஷன் வங்கி 23. ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத்
9. தேனா வங்கி 24. ஸ்டேட் பாங்க் ஆஃப் ிருவான்கூர்
10. ஐடிபிஐ வங்கி 25. ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்
11. இந்தியன் வங்கி 26. ஸ்டேட் பாங்க் ஆஃப் படியாலா
12. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 27. எச்டீஎஃப்சீ வங்கி
13. ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் 28. ஆக்ஸிஸ் வங்கி
14. பஞ்சாப் & சிந்த் பாங்க் 29. ஐசிஐசிஐ வங்கி
15. பஞ்சாப் நேஷனல் வங்கி    

(அஜித் பிரசாத்)
உதவிப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2015-2016/1142

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?