இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் வருமானவரித் தொகையை முன்கூட்டியே செலுத்துங்கள் - மார்ச் 2017 - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் வருமானவரித் தொகையை முன்கூட்டியே செலுத்துங்கள் - மார்ச் 2017
பிப்ரவரி 16, 2017 இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் இந்திய ரிசர்வ் வங்கி, வருமான வரி செலுத்துவோரை, கடைசி நாளுக்கு முன்னதாகவே செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறது. மேலும் அது வருமான வரி செலுத்துவோர் தேர்ந்தெடுக்கப்பட்ட முகவர் வங்கிக் கிளைகள் அல்லது அவை அளிக்கும் இணையதளம் மூலம் வரி செலுத்தும் வசதிகள் போன்ற மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறது. பொதுமக்கள் தேவையின்றி அதிகநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியது இதனால் தவிர்க்கப்படும். மார்ச் மாதக் கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது தெரியவருகிறது. இதன் பொருட்டு, முடிந்த அளவில் கூடுதல் முகப்புகள் அமைக்கப்பட்ட போதிலும், செலுத்தப்படும் வரிப் பணத்திற்கான ரசீதுகளை அளிப்பதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது வங்கிக்கு சிரமமாகவே உள்ளது. செலுத்தப்படும் வருமான வரித் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு 29 முகவர் வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
(அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/2208 |