வெளிநாட்டு நாணயம் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துதல் கூடாது - ஆர்பிஐ - Reserve Bank of India
வெளிநாட்டு நாணயம் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துதல் கூடாது
பத்திரிக்கைக் குறிப்பு
|
இந்திய ரிசர்வ் வங்கி
|
பத்திரிக்கைத்தொடர்பு அலுவலகம்,
மத்திய அலுவலகம், தபால் பெட்டி எண் 406,
மும்பை – 400 001.
|
e-mail: helpprd@rbi.org.in
|
ஆகஸ்ட் 23, 2005
வெளிநாட்டு நாணயம் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும்
என்று வலியுறுத்துதல் கூடாது
ஓட்டல் உரிமையாளர்கள் போன்ற சில சேவை வழங்குவோர் வெளிநாட்டினரிடம் அமெரிக்க டாலரில் தனிக்கட்டணத்தைக் கேட்பதாகவும் அதனை வெளிநாட்டு நாணயமாகச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் ரிசர்வ் வங்கிக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தச் செயல்பாடு அன்னியச் செலவாணி மேலாண்மைச் சட்டம் 1999 (FEMA)க்கு பொருந்தாது. மேலும் இது இந்தியாவில் உள்நாட்டு நாணயத்தின் சட்டப்படியான மதிப்பினைக் குறைப்பதாகவும் உள்ளது.
முன்னர் அன்னியச் செலவாணி ஒழுங்குமுறைச் சட்டம் (FERA) 1973ன்கீழ் இந்திய அரசு 1981 ஆகஸ்ட் 20ஆம் நாளிட்ட அறிக்கை ஒன்றில் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணியர் அன்னிய நாணயத்தில் பணம் செலுத்த் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. எனினும் அன்னியச் செலவாணி ஒழுங்குமுறைச் சட்டம் (FERA) 1973 முன்னரே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இப்போது நடப்பிலுள்ள அன்னியச் செலவாணி ஒழுங்குமுறைகள் FEMA 1999 என்னும் பெயரில் வடிவமைக்கப்பட்டு ஜுன் 1, 2000ல் நடைமுறைக்கு வந்தது.
FEMAவின்கீழ் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் மே 13, 2000 நாளிட்ட அறிக்கை எண் 16, இந்தியாவில் வாழும் நபர்கள் வெளிநாட்டில் வாழும் ஒருவர் இந்தியாவுக்கு வரும்போது அவரிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தில் பணம் பெறுவதற்து மட்டும் உரியது. பரிமாற்ற வசதிக்காக ஒரு வெளிநாட்டவர் அவருக்குச் செய்யப்படும் சேவைகளுக்காக அவர் வெளிநாட்டுப் பணத்திலோ அல்லது இந்தியப் பணத்திலோ அவருடைய விருப்பப்படி பணம் செலுத்தும் சூழ்நிலையை அது உருவாக்கியது. வெளிநாட்டு நாணயத்தில் தான் பணம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் உரிமையை அது இந்தியாவில் வாழ்வோருக்கு வழஙகவில்லை.
இப்போது, வெளிநாட்டினர் அத்தகைய நேரங்களில் வெளிநாட்டு நாணயத்தில் தான் பணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல் எதுவும் நடைமுறையில் இல்லை. ஆகவே, இந்தியாவில் வழங்கப் படும் சேவைகளுக்கு வெளிநாட்டு நாணயத்தில் தான் பணம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது இப்போதுள்ள அன்னியச் செலவாணி நடைமுறைகளுக்குப் பொருந்தாதது.
அஜித் பிரசாத்
மேலாளர்.
பத்திரிக்கை வெளியீடு 2005-2006/238