பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு, ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) நவம்பர் 12 (சனி) மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று திறந்திருக்கும் - ஆர்பிஐ - Reserve Bank of India
பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு, ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) நவம்பர் 12 (சனி) மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று திறந்திருக்கும்
RBI/2016-17/116 நவம்பர் 10, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு, ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) நவம்பர் 12 (சனி) மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று திறந்திருக்கும் பொதுமக்களுக்காக வங்கிகள் திறந்திருப்பதன் விளைவாக, நவம்பர் 12 (சனி) மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு, ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) திறந்திருக்கும். சாதாரண வேலை நாட்களைப் போலவே இவற்றில் பங்கேற்கும் அங்கத்தினர்கள், வங்கிகள் இந்த பணம் செலுத்தும் முறைமைகளுக்கான அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்காக, நவம்பர் 12 மற்றும் 13, 2016 தேதிகளில் செய்து தருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நாட்களில் இத்தகு வசதி உண்டு என்பதை வங்கிகள் உரிய பிரகடனம் செய்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கலாம். இங்ஙனம் (நந்தா S. தவே) |