பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY)– MoA & FW-ன் பயிர்காப்பீடு போர்டலில் (Portal) வங்கிகள் தகவல் அளிக்கத் தவறியது - ஆர்பிஐ - Reserve Bank of India
பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY)– MoA & FW-ன் பயிர்காப்பீடு போர்டலில் (Portal) வங்கிகள் தகவல் அளிக்கத் தவறியது
RBI/2016-17/41 ஆகஸ்டு 25, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அம்மையீர் / ஐயா பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY)– MoA & FW-ன் பயிர்காப்பீடு போர்டலில் (Portal) வங்கிகள் தகவல் அளிக்கத் தவறியது பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை, செயல்முறைகளை கட்டாயமாக பின்பற்றுதல் குறித்து வெளியிடப்பட்ட எங்களின் மார்ச் 17, 2016 தேதியிட்ட FIDD.No.FSD.BC.20/05.10.007/2015-16-ஐப் பார்க்கவும். இத்திட்டத்தில் குறிப்பிடப்படும் இலக்குகளை அடைந்திடும் பொருட்டு, வங்கிக் கடன் வாங்கியுள்ள விவசாயிகள் பற்றிய தகவல்கள் 100 சதவிகிதம் மற்றும் கடன் வாங்காத கணிசமான அளவில் உள்ள இதர விவசாயிகள் குறித்த தகவல்களையும் அளிப்பதை வங்கிகள் உறுதிப்படுத்திடவேண்டும். 2. அரசின் PMFBY திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் கீழ், வங்கிகள் தம்மிடம் கடன் வாங்கிய மற்றும் கடன் வாங்காத, ஆனால் பயிர் காப்பீட்டை வங்கிக் கிளைகளில் பெறும் விவசாயிகளின் நில அளவு,பயிர்செய்யப்பட்ட விவரங்களை சேகரித்து வைப்பது அவசியமாகும். 3. மேற்குறிப்பிட்டதன் அடிப்படையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், விவசாயிகள் குறித்த அனைத்து விவரங்களையும் பயிர்காப்பீட்டு நலன் பொருட்டு www.agri-insurance.gov.in என்ற இணையதளத்தில் உள்ள ஒருங்கிணைந்த போர்டலில்(Portal) அளிக்கும்படி வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. இந்த போர்டலில் தேவையான விவரங்களை வங்கிகள் அளிக்கவில்லை என்பது எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் MoA & FW மாநில அரசுகள் ஆகிய அமைப்புகள் பயிர்காப்பீட்டின் கீழ் உள்ள நில அளவைகள், கழிக்கப்பட்ட பிரிமியம் தொகை போன்றவை குறித்த விவரங்கள் கிடைக்காமல் இடர்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த போர்டலில் (Portal) தேவையான தகவல்களை உடனடியாக அளிக்குமாறு உங்கள் கிளைகளுக்கு வழிகாட்டுதல்கள் அளிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். இங்ஙனம் (உமா சங்கர்) |