முதிர்வு நிலைக்கு முன்னரே வைப்புகளுக்கான தொகையைத் திருப்பி அளித்தல்
RBI/2005-06/231
DNBS(PD)CC.No.60/02.01/2005-06 டிசம்பர் 09, 2005
வங்கி
அல்லாத நிதி
நிறுவனங்கள்
NBFCs
வங்கி
அல்லாத மற்ற
நிறுவனங்கள் (சீட்டுக்
கம்பெனிகள்) MNBCs
வங்கி
அல்லாத
நிறுவனங்கள்
RNBCs
அன்புடையீர்,
முதிர்வு
நிலைக்கு
முன்னரே
வைப்புகளுக்கான
தொகையைத்
திருப்பி
அளித்தல்
2004 அக்டோபர் 5ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை DNBS(pd)cc.no.44/ 02.01/2004-05 யைப் பார்க்கவும். பாரா 3(5)இல் கூறியுள்ளபடி, முதிர்வு நிலைக்கு முன்னரே வைப்புகளுக்கான தொகையை வழங்குவதற்காக ஒரே பெயர்/முதல் பெயர் கொண்ட ஒருவரது பல வைப்புகளையும் ஒரே வைப்பாகக் கருதலாம் என்று சொல்லியிருந்தோம்.
2. இப்படிப் பல்வேறு வைப்புகளை ஓன்றாகக் கணக்கிடுவது என்பது பிரச்சினைகள் உள்ள வங்கி சாரா நிதி அல்லது மற்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும். வெளியீட்டு எண்கள் 182-184 மற்றும் கீழே குறிப்பிட்டுள்ள வெளியீடுகளைப் பார்க்கவும்.
a. DFC 118/DG(SPT)-98 தேதி 31.01.98
b. DFC 55/DG(O)-87 தேதி 15.05.87
c. DNBC 39/DG(H)-77 தேதி 20.06.17
3. முதிர்வு நிலைக்கு முன்னர் வைப்புகளுக்கான தொகையை வழங்குவதற்காக ஒரே நபரிந்/முதற் பெயர் கொண்டவரின் பல்லவேறு வைப்புகளை இணைப்பது என்பது, திருப்பிச் செலுத்தப்படுவதற்காகவோ அல்லது வைப்பின் கடன் பெறுவதற்காகவோ மட்டுமே இருக்க முடியும். அதுவும் இது பிரச்சினைகளுடைய வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களுக்கு ரூ10000/- வரை தான் பொருந்தும்.
4. வைப்புதாரர் ஒருவேளை இறக்க நேரிட்டால், பிரச்சினைகளுடைய வங்கி அல்லாத நிதி அல்லது மற்ற நிறுவனமாக இருந்தாலும் சரி, வைப்புகளுக்கான குறைந்த கால இருப்பின் போதாதனாலும் சரி, பல வைப்புகளை ஒன்றாகச் சேர்க்காமல் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை வாரிசுகளுக்கு வழங்கிட வேண்டும்.
5. உங்கள் நிறுவனம் எந்த ரிசர்வ் வங்கிக் கிளையின் வங்கி சாரா அமைப்புகளின் மேற்பார்வைத் துறையின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறதோ, அதற்கு இந்த சுற்றறிக்கை கிடைத்த விபரத்திற்குப் பதில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நம்பிக்கையுள்ள
பி.
கிருஷ்ணமூர்த்தி
தலைமைப் பொது
மேலாளர்
பொறுப்பு
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: