முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் கண்ணோட்டம் 2016-17 - ஆர்பிஐ - Reserve Bank of India
முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் கண்ணோட்டம் 2016-17
டிசம்பர் 21, 2017 முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் கண்ணோட்டம் 2016-17 இந்திய ரிசர்வ் வங்கி இன்று ‘முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள்’ கண்ணோட்டம் 2016-17 ’என்ற தலைப்பில் 4 வது தொகுதியை ஆண்டு வெளியீடாக வெளியிடுகிறது. இதை https://dbie.rbi.org.in/DBIE/dbie.rbi?site=publications இல் காணலாம். இந்த வெளியீட்டை இந்திய ரிசர்வ் வங்கியின் ‘கூட்டுறவு வங்கி மேற்பார்வை துறை’ வெளியிட்டுள்ளது. இந்த வெளியீடு 2016-17 நிதியாண்டிற்கான பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளின் நிதிக் கணக்குகளை உள்ளடக்கியது. இருப்புநிலை அறிக்கை, இலாப நட்ட கணக்கு, வாராக்கடன்(செயல்படாத சொத்துக்கள்), நிதி விகிதங்கள், மாநில வாரியான அலுவலகங்கள் மற்றும் முன்னுரிமை துறை கடன்கள் பற்றிய முக்கிய தகவல்களை இந்த வெளியீடு வழங்குகிறது. அத்துடன், போதுமான மூலதனம், இலாபம் மற்றும் பணியாளர் உற்பத்தித்திறன் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி விகிதங்கள் குறித்த பட்டியலிடப்பட்ட முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளின் வங்கி வாரியான தகவல்களை இந்த வெளியீடு வழங்குகிறது. இந்திய பொருளாதாரம் தொடர்பான தரவுத்தளத்தின் (டிபிஐஇ) https://dbie.rbi.org.in/ இணைப்பு மூலம் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் ஆண்டு அடிப்படையில் மின்னணு வடிவத்தில் மட்டுமே வெளியீடு வெளியிடப்படுகிறது. வெளியீட்டின் அச்சுப் பிரதிகள் எதுவும் இருக்காது. ஜோஸ் ஜே. கட்டூர் பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1712 |