முன்னுரிமைத் துறை கடன் - இலக்குகள் மற்றும் வகைப்படுத்துதல்: பெருநிறுவனம் சாராத விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் – கடந்த மூன்று ஆண்டுகளில் முறைமையின்படி சராசரி விவரம்
RBI/2017-18/61 செப்டம்பர் 21, 2017 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் முன்னுரிமைத் துறை கடன் - இலக்குகள் மற்றும் வகைப்படுத்துதல்: பெருநிறுவனம் சாராத விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் – கடந்த மூன்று ஆண்டுகளில் முறைமையின்படி சராசரி விவரம் மேற்குறிப்பிடப்பட்டுள்ள பொருள் பற்றி, ஜூலை 16, 2015 தேதியிட்ட சுற்றறிக்கை No. FIDD. CO. Plan. BC. 08/04.09.01/2015-16-யின் படி, பெருநிறுவனம் சாராத விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் நேரடியாக கடன் வழங்கியதில் உள்ள சாதனையைக் கணக்கிட சராசரி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், மேலும் இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் இவை தொடக்கத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இது சம்பந்தமாக, 2017-18 நிதியாண்டிற்கான முன்னுரிமைத் துறையின் கீழ் கடன் வழங்கியதில் உள்ள சாதனையைக் கணக்கிட சராசரி என்பது11.78% ஆகும். இங்ஙனம் (உமா சங்கர்) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: