RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78492421

UDAY திட்டத்தின் கீழ் சிறப்பு பத்திரங்களை தனிப்பட்ட வகையில் தெலுங்கானா அரசு வெளியிடுகிறது

மார்ச் 02, 2017

UDAY திட்டத்தின் கீழ் சிறப்பு பத்திரங்களை தனிப்பட்ட
வகையில் தெலுங்கானா அரசு வெளியிடுகிறது

தெலுங்கானா அரசு, சிறப்புப் பத்திரங்களை ரூ. 8,922.93 கோடி மதிப்பிற்கு உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா திட்டத் (Ujjwal Discom Assurance Yojna-UDAY) தின் கீழ் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் சந்தை முதலீட்டாளர்கள் தனது ஏலத் தொகை விவரங்களை, கீழே குறிப்பிட்டுள்ள படிவத்தில் மார்ச் 06, 2017 காலை 10.30 முதல் 12.00 மணி வரை மின்னஞ்சல் மூலம் அளிக்கலாம்.

முதலீட்டாளர் பெயர் உரிய ஆண்டின் FIMMDA வருவாய்க்கு அதிகமாக அளிக்கப்படும் அதிக வருவாய் பங்கேற்க முன்வரும் தொகை
     

மார்ச் 07, 2017-செவ்வாய் அன்று பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்வு அளிக்கப்படும். இதற்கான கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு –

  1. சிறப்புப் பத்திரங்களின் முகமதிப்பு ரூ. 100.

  2. பத்திரங்கள் சம அளவில், 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15- ஆண்டுகால முதிர்வுடையதாக வெளியிடப்படும். ஒரு முதலீட்டாளர் இவை அனைத்திலும் சீராக பங்கீடு செய்யும் வகையில், ஏலத்தொகையை அளித்து, அவ்வாறே ஒதுக்கீடு செய்யப்படும் வகையில் பத்திரங்களை வாங்கிடவேண்டும்.

  3. குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ. 100 கோடி.

  4. மார்ச் 03, 2017 நாளின் முடிவில் FIMMDA அளிக்கும் அரசுப்பத்திர வருவாய் விகிதத்தோடு ஒத்துப்போகும்படி அடிப்படை விகிதம் இருக்கும்.

  5. FIMMDA-வின் அரசுப்பத்திர வருவாயுடன் 75 அடிப்படைப் புள்ளிகள் சேர்த்து, ஏலதாரர் கோரும் வருவாய் விகிதம் சீராக அடிப்படை விகிதத்துடன் இணைக்கப்பட்டு, கூப்பன் விகிதம் (ஆண்டுக்கு இருமுறை அளிக்கப்படும்) நிர்ணயிக்கப்படும்.

  6. ஒவ்வொரு முதிர்வுகால பத்திரத்திலும் ‘பல்வகை விலை ஏலமுறை’ முறையில் (SDL போலவே) பத்திரம் வெளியிடப்படும். வரையறுக்கப்பட்ட ஏலத்தொகையை விடக்குறைவான அளவில் (விலையில்) கோரியவர் வெற்றிபெற்றால், வித்தியாசத்தொகை ஊக்கத்தொகையாக செலுத்தப்படவேண்டும்.

  7. போட்டியாளர்கள் அளிக்கும் வருவாய் விகித வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர்.

  8. எந்தவொரு ஏலதாரரின் ஏலத்தையும் விருப்பம்போல் ஏற்கவோ மறுக்கவோ வங்கிக்கு தனி உரிமை உண்டு.

இந்திய அரசின் சக்தித் துறை, சக்தி பகிர்மான குழுமங்கள் செயல்பாடு மற்றும் நிதி குறித்த UDAY திட்டம் பற்றி, ஒரு அரசு அறிவிக்கையை (எண் 06.02.2015 – NEF/FRP) நவம்பர் 20, 2015 அன்று வெளியிட்டதை இங்கு நினைவு கூர்கிறோம்.

(அநிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2341

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?