வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சைக்கு அன்னியச் செலாவணி வழங்கும் செயல் முறைகளை எளிமையாக்கப்பட்டுள்ளன - ஆர்பிஐ - Reserve Bank of India
வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சைக்கு அன்னியச் செலாவணி வழங்கும் செயல் முறைகளை எளிமையாக்கப்பட்டுள்ளன
இந்தியாவில் குடியிருப்போர் வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சைக்கான அந்நியச் செலாவணியை சிரமமும் கால தாமதமும் இல்லாமல் பெறுவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் 50,000 அமெரிக்க டாலர்கள்வரை வழங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மருத்துவ மனையிலிருந்தோ, மருத்துவரிடமிருந்தோ செலவு மதிப்பீட்டு விபரம் பெற்றுத் தரவேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை. தேவைப்படும் அந்நியச் செலாவணியைப்பற்றி நோயாளி தரும் உறுதிமொழியின் அடிப்படையில், காசோலையாகவோ அல்லது அவரது கணக்கில் பற்றெழுதும் வகையிலோ அந்நியச் செலாவணி தரப்படும்.
இப்போதுள்ள விதிமுறைகளின்படி இந்தியாவில் குடியிருப்போர் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடமிருந்து, வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனையிலிருந்து சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்ற உத்தேச மதிப்பீட்டு விவரத்தினை அளித்துப்பெறமுடியும்.
ரிசர்வ் வங்கி, இந்தியாவில் குடியிருப்போர் அந்நியச் செலாவணி பெறுவது தொடர்பான சட்டங்களையும் விதிமுறைகளையும் மறுஆய்வு செய்து இப்போதுள்ள செயல்முறைகளை எளிதாக்குதல், நெகிழ்வுடைய அணுகுமுறைகள் போன்ற நடவடிக்கைகளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் ஒரு படியாக மருத்துவ சிகிச்சைக்கு அந்நியச் செலாவணி வழங்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட செயல்முறைகள் பற்றிய தெளிவான வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அல்பனா கில்லாவாலா
பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு-2002-2003/264