மெய்நிகர் நாணயங்களைக் (Virtual Currencies-VCs) கையாள்வதில் தடை - ஆர்பிஐ - Reserve Bank of India
மெய்நிகர் நாணயங்களைக் (Virtual Currencies-VCs) கையாள்வதில் தடை
RBI/2017-18/154 ஏப்ரல் 06, 2018 அனைத்து வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள் / அன்புடையீர் மெய்நிகர் நாணயங்களைக் (Virtual Currencies-VCs) கையாள்வதில் தடை இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 24, 2013, பிப்ரவரி 01, 2017 மற்றும் டிசம்பர் 05, 2017 ஆகிய தேதிகளில் பொது அறிவிப்பின் மூலம் மெய்நிகர் நாணயங்களைக் (VCs) கையாள்வதில் தொடர்புடைய பல்வேறு அபாயங்களைப்பற்றி இந்நாணயங்களை பிட்நாணயங்கள் உட்பட, உபயோகிப்பவர்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்களை எச்சரிக்கை செய்துள்ளது. 2. தொடர்புடைய அபாயங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள், மெய்நிகர் நாணயங்களின் சேவைகளில் ஈடுபட்டோ அல்லது மெய்நிகர் நாணயங்களைக் கையாளுவதில் அல்லது எந்தவொரு நபர் அல்லது நிறுவனத்திற்கு உதவுவதற்காகவோ சேவைகளை அமல்படுத்தக்கூடாது என்று உடனடியாக முடிவு செய்யப்பட்டது. கணக்குகள், பதிவு செய்தல், வர்த்தகம் செய்தல், தீர்வு செய்தல், க்ளியரிங், மெய்நிகர் டோக்கன்களுக்கு எதிரான கடன்களை வழங்குதல், அவற்றை இணைத்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துதல் மற்றும் VC-க்களின் கொள்முதல் / விற்பனை தொடர்பான கணக்குகளில் பணத்தை பரிமாற்ற / பெறுதல் ஆகியவை இதில் அடங்கும். 3. ஏற்கனவே இவ்வித சேவைகளை வழங்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் இந்தச் சுற்றறிக்கை அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் இத் தொடர்பிலிருந்து வெளியேறவேண்டும். 4. இந்த அறிவுறுத்தங்கள் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949, பிரிவு 36 (1) (a) மற்றும் வங்கிக் கட்டுப்பாட்டு சட்டத்தின் பிரிவு 56, 36 (1) (a) ஆகிய பிரிவுகளுடன் பிரிவு 35A இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 மற்றும் பிரிவு 45JA, 45L மற்றும் 10 (2) ஆகியவற்றைப் படித்து, பட்டுவாடா மற்றும் தீர்வு அமைப்புச் சட்டம் 2007 பிரிவு 18 உடன் சேர்ந்து வழங்கப்படுகிறது. இங்ஙனம் (சௌரௌ சின்கா) |