RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78439685

வங்கி முகப்புகளில் நோட்டுகளை எண்ணும் இயந்திரங்கள்

வங்கி முகப்புகளில் நோட்டுகளை எண்ணும் இயந்திரங்கள்

 

 

DCM (Plg)No.874/10.36.00/2003-04 ஜனவரி 29, 2004

 

தலைவர் & நிர்வாக இயக்குநர்

ஸ்டேட் வங்கி / அதனுடன் சேர்ந்த வங்கிகள்

நாட்டுடமையாக்கப்பட்ட / தனியார் / அயல்நாட்டு

பிராந்தியக் கிராமப்புற / உள்ளூர் வங்கிகள்

 

அன்புடையீர்,

 

வங்கி முகப்புகளில் நோட்டுகளை எண்ணும் இயந்திரங்கள்

 

 

1949 வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 35A யின் கீழ் 2001 நவம்பர் 7 ஆம் தேதியிட்ட DBOD.No.Dir. BC 43/13.03.00/2001-02 கட்டளைப்படி அனைத்து வங்கிக் கிளைகளும் ‘பின்’ அடிக்காத நோட்டுகளை வாங்க/கொடுக்க வேண்டும். இரண்டு பக்கமும் எண்கள் தெரிவது போல் உள்ள நோட்டுக்கள் எண்ணும் இயந்திரங்களைத் தேவையான அளவு வாங்கி கிளைகளின் முகப்புகளில் வைக்க வேண்டும் என்று அவ்வப்போது அறிவித்து வருகிறோம். மக்களுக்குக் கொடுக்கப்படும் நோட்டுக்களின் எண்ணிக்கையை, முகப்புகளின்முன் நின்று வாங்கும்போது அவர்களே பார்த்துக் கொள்ள, இரண்டுப்பக்கமும் எண்கள் தெரிவதுபோல் உள்ள நோட்டுக்கள் எண்ணும்இயந்திரங்கள் பயன்படும்.

 

2. பல கிளைகளில் இவ்வாறான இயந்திரங்கள் இல்லாமல் இருப்பது பற்றி பல புகார்கள் வருகின்றன. எனவே, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் வகையில், நோட்டு எண்ணும் இயந்திரங்களை தேவையான அளவில் கிளைகளில் வைக்க வேண்டும். அவைகளில் நோட்டுகளின் எண்ணிக்கை காசாளருக்கும் வாடிக்கையாளருக்கும் தெரியும் வகையில் அமைந்திருத்தலும் வேண்டும்.

 

3. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்க

 

 

அன்புடன்

 

 

 

V.R. கெய்த்வாடு

தலைமைப் பொது மேலாளர்

 

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?