RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78464147

பொது சேமநிதித் திட்டம் 1968

RBI/2009-10/365
DGBA.CDD.H.7530/15.02.001/2009-10

டிசம்பர்  29, 2010

தலைவர்/நிர்வாக இயக்குநர்/ நிர்வாக இயக்குநர்
அரசு கணக்குத்துறை/ தலைமை அலுவலகங்கள்
பாரத ஸ்டேட் வங்கி/ ஸ்டேட் பேங் ஆப் இந்தூர்/
ஸ்டேட் பேங் ஆப் பாட்டியாலா/ ஸ்டேட் பேங் ஆப் பைகானர் அண்டு ஜெய்பூர்
ஸ்டேட் பேங் ஆப் திருவாங்கூர்/ ஸ்டேட் பேங் ஆப் ஹைதராபாத்/
ஸ்டேட் பேங் ஆப் மைசூர்/அலகாபாத் வங்கி/பரோடா வங்கி/
பேங்க் ஆப் இந்தியா/மஹாராஷ்ரா வங்கி/கனரா வங்கி/
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா/கார்ப்பரேஷன் வங்கி/தேனா வங்கி/
இந்தியன் வங்கி/இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி/பஞ்சாப் நேஷனல் வங்கி/
சின்டிகேட் வங்கி/யுகோ வங்கி/யூனியன் பேங்க் ஆப் இந்தியா/
யூனைடெட் பேங்க் ஆப் இந்தியா/விஜயா வங்கி/
ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்/ஐடிபிஐ லிமிடெட்

அன்புடையீர்,

பொது சேமநிதித் திட்டம் 1968

  1. வைப்புத் தேதி குறித்த தெளிவுபெற விளக்கம்
  2. 18 வயது நிறைவு பெறாதவருக்கு கணக்குத் தொடங்குவதற்கான அறிவுறுத்தல்களை வலியுறுத்துதல்.

1. காசோலை மூலம் பணம் செலுத்தப்பட்டால் வைப்புத்தேதியைக் கணக்கிடுதல் குறித்த விளக்கம்

  1. பொதுசேமநிதித் திட்டம் 1968 (PPF)  குறித்த நிதி அமைச்சகத்தின் எண் F3(9)-PD/72  செப்டம்பர் 4, 1972 தேதியிட்ட கடிதத்தின் கருத்துப்படி பின்வருமாறு அறிவுறுத்தப்படுவதை நீங்கள் அறிவீர்கள். “நிதியின் பங்கேற்பாளர் பணத்தை உள்ளூர் காசோலை அல்லது கேட்போலையாக கணக்கிற்குரிய அலுவலகத்தில் செலுத்திய தேதியே வைப்புக்குறிய தேதியாக கருதப்படும்.  ஆனால் அந்த காசோலை பணமாக்கப்படும்போது அதற்குரிய மதிப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்”.  ஆனால் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 2004 போன்ற இதர சிறுசேமிப்பு திட்டங்களில் காசோலையாக (உள்ளூர்/ வெளியூர்) பணம் செலுத்தப்பட்டால் அது பணமாக மாற்றப்பட்ட தேதியே வைப்பிற்குரிய தேதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

  2. பொது சேமநிதி, அஞ்சலக சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற அனைத்திலும் ஒரே சீரான நடைமுறையை வைப்புத் தேதி விஷயத்தில் கொண்டுவரும் நோக்கத்தில், நிதி அமைச்சகம் தனது செப்டம்பர் 4,1972 தேதியிட்ட கடிதத்தைத் திருத்தியமைத்து இலக்கம் 7.7.2008/NC II, பிப்ரவரி 10,2010 தேதியிட்ட கடிதம் மூலம் பின்வருமாறு அறிவுறுத்தியுள்ளது.  “பொதுசேமநிதியில் வைப்பாக உள்ளூர் காசோலை அல்லது கேட்போலை மூலம் பங்கேற்பாளர் பணம் செலுத்தினால், அந்த காசோலை, கேட்போலை பணமாக்கப்பட்ட தேதியே வைப்பிற்குரிய தேதியாக எடுத்துக்கொள்ளப்படும்”.

  3. இந்த விவரத்தை பொதுசேம நிதி வர்த்தகத்தை மேற்கொள்ளும் உங்களின் வங்கிக்கிளைகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, கணினி வழியான முறைமையிலும் இதை புகுத்திடுமாறு உங்களை வேண்டுகிறோம்.  வாடிக்கையாளர் அறிந்துகொள்ளும் பொருட்டு இந்த தகவல் உங்களின் கிளைகளிலும் தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.

2. 18 வயது நிறைவு பெறாதவருக்கு கணக்குத் தொடங்குதல்

  1. சில முகவர் வங்கிகள் 18 வயது நிறைவு பெறாதவருக்கு கணக்குத் தொடங்க மறுப்பதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து பின்வருமாறு வலியுறுத்தப்படுகிறது. பொதுசேமநிதி திட்டம் 1968ன் விதி எண் 3(1)ன்கீழ் தனக்காகவோ அல்லது அவர் பாதுகாவலராக இருக்கும் ஒரு 18வயது நிரம்பாத நபரின் சார்பிலோ பொதுசேம நிதியில் உரிய பங்களிப்புத் தொகையைச் செலுத்த முடியும்.  மேலும் நிதி அமைச்சகத்தின் F.7/34/88- NS II, நவம்பர் 17, 1989 தேதியிட்ட கடிதத்தின்படி ஒரு தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் மட்டும் 18 வயது நிரம்பாத தமது குழந்தையின் சார்பில் சேமநிதி கணக்கைத் தொடங்கலாம்.

  2. பொதுசேம நிதித் திட்டத்தினை நிர்வகிக்கும் உங்களின் வங்கிக் கிளைகளுக்கு இந்த அறிவுறுத்தல்களை வலியுறுத்திக் கூறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள

(சங்கீதா லால்வாணி)
துணைப் பொது மேலாளர்.

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?