RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78440226

பொது வருங்கால நிதித்திட்டம் 1968 - விளக்கங்கள்

RBI / 2004-05 / 479
Ref.No.CO.DT.15.01.001/H.9844-9866/2004-05 

மே 25, 2005

பொது மேலாளர்
அரசுக்கணக்குத் துறை
பாரத ஸ்டேட் வங்கிகள் அதனுடன் சேர்ந்த வங்கிகள்
அலாகபாத், பரோடா, மஹாராஸ்ட்ரா, கனரா,
கார்ப்பரேஷ்ன், தேனா, இந்தியன், இந்தியன் ஓவர்சீஸ்,
பஞ்சாப் நேஷ்னல், சிண்டிகேட், யூகோ, யூனியன்,
யூனைடட், பாங் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங் ஆப் இந்தியா

அன்புடையீர்,

 பொது வருங்கால நிதித்திட்டம் 1968 - விளக்கங்கள்

2005 மே 14 தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கை CO.DT.15.02.001/H.9593 / 9615/2004-05 ஐப் பார்க்கவும். 2005 மே 15 ஆம் தேதியிலிருந்து பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் பல குறிப்புகளைமாற்றி மத்திய நிதி அமைச்சகத்தின் 2005 மே 13 தேதியிட்ட வெளியீட்டினையும் இணைத்திருந்தோம்.

2. இலைகளுக்கிடையில், மர்ரிய அரசின் நிதி அமைச்சகத்தின் 2005 மே 20 தேதியிட்ட கடித எண் F.2/8/2005-NS II இல் கீழே கண்ட விளக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

i) சிறு சேமிப்பினைத் தனிமனிதர்களுக்கு மட்டுமே முதலீடு செய்வதற்கென தீர்மானித்து பல்வேறு சிறுசேமிப்புத்திட்டங்களுக்கு உரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளதால், பொது வருங்கால வைப்புத்திட்டமும் அதுபோல தனிநபர்களுக்கு மட்டுமே என்று தீர்மானிக்கப்படுகிறது. தனிநபர் இல்லாமல் பிரிக்கப்படாத இந்து கூட்டுக்குடும்பம், குழுக்கள், வைப்பு நிதிகள் போன்றவைகள் 2005 மே 13 அன்றோ அல்லது அதற்குப் பின்னாகவோ பொது வருங்கால வைப்புக்கணக்கு துவங்கியிருந்தால் அவைகளை உடனடியாக முடித்துக்கொண்டு முதலீடு செய்யப்பட்ட பணம் வட்டியேதும் இன்றி அந்த அமைப்புக்ளுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.

ii) 2005 மே 13 தேதிக்கு முன்னர் துவக்கப்பட்ட கணக்குகளுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. அக் கணக்குகள் நடைமுறையில் முதிர்வு நிலை வரை சட்டவிதிக்களுக்குட்பட்டு இருக்கும். முதிர்வு நிலைக்கும் பின்னர் இக்கணக்குகளை நீட்டிப்பது என்பது 2005 மே 13 மாற்றங்களை ஒத்து இருக்க வேண்டும்.

3. எனவே உங்கள் கிளைகள் அனைத்திற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்க தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டுகின்றோம்.

4. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

நம்பிக்கையுள்ள

D. ராஜகோபால ராவ்
துணைப்பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?