இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளை நாணயங்களை, எடையிட்டு ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளை நாணயங்களை, எடையிட்டு ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது
ஏப்ரல் 19, 2004
பொதுமக்களில் எவரும் புழக்கத்திலுள்ள புழக்கத்திலில்லாத நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி முகப்புகளில் செலுத்துவது போன்றே பொது அல்லது தனியார் வங்கிகளின் முகப்புகளிலும் செலுத்தலாம். வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியும் இந் நாணயங்களை எடையிட்டு ஏற்றுக் கொள்வார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி மும்பையின் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் கிளைகள் யாவற்றையும் எடையிட்டு 5 பைசா அலுமினிய நாணயங்கள் 10, 20 பைசா அலுமினிய வெண்கல நாணயங்கள் 10 பைசா எஃகுவகை நாணயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது. இந்திய ரிசர்வ் வங்கி, அத்தகைய நாணயங்களை வைத்திருக்கும் பொதுமக்கள் யாவரும் மதிப்புவாரியாகவும், உலோக வாரியாகவும் சிறுபாலத்தீன் பைகளில் நூறு நூறு நாணயங்களாக நிரப்பி வங்கியிலுள்ள முகப்புகளில் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. இதைப்போன்றே புழக்கத்திலுள்ள எஃகு வகை 25 பைசா, 5 பைசா, ஒரு ரூபாய் மற்றும் செம்பு, நிக்கல் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் நாணயங்களையும் வங்கிகள் ஏற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் நடைமுறையிலுள்ளன.
அல்பனா கிள்ளாவாலா
தலைமை பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு 2003-2004/1241