பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 27, 2020 பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - கோவிட்-19 க்கு எதிர்வினையாக மூலதன சந்தைகளில் உயர்ந்த ஏற்ற இறக்கத்தால் ஏற்பட்ட பரஸ்பர நிதிகள் (எம்எஃப்) மீதான பணப்புழக்க சிக்கல்கள், சில கடன் எம்எஃப் கள் மூடும் தருவாயில் இருப்பதால், அந்த எம்எஃப் களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும் பணிகள் அதிகரித்துள்ளதால், மேலும் வலுவடைந்துள்ளன. இந்த பணப்புழக்க சிக்கல்கள் அதிக ஆபத்துள்ள முதலீடுகளான கடன் சார்ந்த எம்எஃப் களோடு நிறுத்தப்பட்டிருக்கிறது; இது தவிர மற்ற பெரும்பாலான எம்எஃப் களில் பணப்புழக்கம் தேவையான அளவு உள்ளது. 2. ஆர்பிஐ விழிப்புடன் இருப்பதாகவும், கோவிட் -19 இன் பொருளாதார தாக்கத்தை குறைக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறியுள்ளது. பரஸ்பர நிதி(எம்எஃப்)களில் பணப்புழக்க அழுத்தங்களைத் குறைக்கும் நோக்கில், ரூ. 50,000 கோடி பரஸ்பர நிதிகளுக்காக ஒரு சிறப்பு பணப்புழக்க வசதியைத் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3. எஸ்எல்எஃப் - எம்எஃப் இன் கீழ், ரிசர்வ் வங்கி 90 நாட்கள் காலவரையறை ரெப்போ நடவடிக்கைகளை நிலையான ரெப்போ விகிதத்தில் நடத்தும். எஸ்எல்எஃப் – எம்எஃப் துரிதமாகவும் திறந்த நிலையிலும் கிடைக்கும் மற்றும் திங்கள் முதல் வெள்ளி வரை எந்த நாளிலும் (விடுமுறை நாட்களைத் தவிர) நிதி பெற வங்கிகள் தங்கள் ஏலங்களை சமர்ப்பிக்கலாம். இந்தத் திட்டம் இன்று முதல், அதாவது ஏப்ரல் 27, 2020 முதல் மே 11, 2020 வரையிலோ அல்லது ஒதுக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்தி முடிக்கும் வரையிலோ, எது முந்தையதோ அதற்க்கேற்பக் கிடைக்கிறது. சந்தை நிலைமைகளைப் பொறுத்து ரிசர்வ் வங்கி வரையறுக்கப்பட்ட தேதி மற்றும் தொகையை மதிப்பாய்வு செய்யும். 4. எஸ்எல்எஃப் – எம்எஃப் இன் கீழ் பெறப்பட்ட நிதிகள் (1) கடன்களை நீட்டிப்பது மற்றும் (2) முதலீட்டு தர கார்ப்பரேட் பத்திரங்கள், வணிகத் தாள் (சிபி) கள், எம்எஃப் களின் கடன் பத்திரங்கள் மற்றும் வைப்புத்தொகையின் சான்றிதழ்கள் (சிடி) ஆகியவற்றிற்கு இணையாக நேரடியாக வாங்குதல் மற்றும் / அல்லது ரெபோ களின் மூலம் எம்எஃப் களின் பணப்புழக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேகமாக வங்கிகளால் பயன்படுத்தப்படலாம். 5. எஸ்எல்எஃப் – எம்எஃப் வசதியின் கீழ் செய்யப்படும் முதலீடுகள், எச்.டி.எம் இலாக்காவில் சேர்க்க அனுமதிக்கப்பட்ட மொத்த முதலீட்டில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பினும், முதிர்வு வரை வைப்பு (எச்.டி.எம்) என வகைப்படுத்தப்படும். இந்த வசதியின் கீழ் வெளிப்பாடுகள் பெரிய வெளிப்பாடு கட்டமைப்பின் (எல்.ஈ.எஃப்) கீழ் கணக்கிடப்படாது. எஸ்எல்எஃப் – எம்எஃப் இன் கீழ் பெறப்பட்டு எச்டிஎம் பிரிவில் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களின் முக மதிப்பு முன்னுரிமை துறை இலக்குகள் / துணை இலக்குகளை நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட உணவு அல்லாத வங்கி கடன் (ஏஎன்பிசி) கணக்கிடுவதற்கு கருத்தப்படாது. எஸ்எல்எஃப் – எம்எஃப் இன் கீழ் எம்எஃப் களுக்கு வழங்கப்படும் ஆதரவுக்கு வங்கிகளின் மூலதன சந்தை வெளிப்பாடு வரம்புகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 6. விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2276
|