கம்பிப் பிணைப்பிடாத (unstapled) பணத்தாள்களை மட்டுமே ஏற்கவேண்டுமென இந்திய ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
கம்பிப் பிணைப்பிடாத (unstapled) பணத்தாள்களை மட்டுமே ஏற்கவேண்டுமென இந்திய ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுக்கிறது
ஜூன் 5, 2003
அச்சு ஊடகத்தின் சில பிரிவினர் ஜூன் 5, 2003 ஆம் நாள் தங்கள் வெளியீடுகளில் இந்திய ரிசர்வ் வங்கியின், கம்பிப் பிணைப்பிடாத பணத்தாள்களை மட்டுமே வழங்கவும் பெறவும் வேண்டுமென வலியுறுத்தும் நவம்பர் 7, 2001 தேதியிட்ட அறிவுறுத்தலை நடைமுறைப் படுத்த இயலாததற்கான இடர்களையும் சிக்கல்களையும் உண்மைபோல் தோற்றமளிக்கும் காரணங்களையும் உள்ளடக்கிய கதைகளை வெளியிட்டனர்.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி, நவம்பர் மாதம், 2001ல் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுநெறிகள் குறித்த விளக்கத்தை அளித்து மேற்குறிப்பிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் அக்குழப்பம் தவிர்க்கக் கூடாது எனவும் குறிப்பிட்டது. அந்த அறிவுறுத்தலில், ஏனைய அம்சங்களோடு வங்கிகள் பணத்தாள் எண்ணுவதற்கும் அவற்றைக் கட்டுவதற்கும் கருவிகளை வாங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது. எனவே இச்செயல்பாடு தொடர்பாக வங்கிகளுக்கு போதுமானதிற்குக் கூடுதலாகவே காலம் கொடுக்கப்பட்டு தேவையான வசதிகளையும் நடைமுறைகளையும் தயார் படுத்திக் கொள்ள வேண்டுமெனக் கூறியிருக்கிறது. பணத்தாள் கச்சையிடும் கருவி சிறுபணத்தாள் கட்டுகளையும் சுமைகளையும் செங்குத்தாகவும் கிடையாகவும் எவராலும் ஒரு பணத்தாளைக் கூட அதனின்று எடுக்க இயலாத வகையில் சுற்றிக் கட்டப்படுகிறது. அத்தோடு சிறப்பான அம்சமாக, இந்திய ரிசர்வ் வங்கியோடு தொடர்புடைய இரயில்வே, தபால்துறை, சுங்கத்துறை, வட்டார கடவுச கடவுச் சீட்டு அலுவலகம், பால்வள ஆணையர் அலுவலகம் போன்ற மாநில அரசாங்கத் துறைகள், காப்புறுதிப் பதிவாளர் அலுவலகம், கொல்கத்தா ஆட்சியர் அலுவலகம் போன்ற எல்லா அரசாங்கத் துறைகளும் அவ்வறிவுறுத்தலை ஏற்கனவே செயல்படுத்தத் தொடங்கி இந்திய ரிசர்வ் வங்கியில் அவர்கள் கம்பிப் பிணைப்பிடாத பணத்தாள்களையே செலுத்துகிறார்கள்.
மேலும் கொல்கத்தாவிலுள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகம் கம்பிப் பிணைப்பிடாத பணத்தாள் அறிவுறுத்தலைப் பின்பற்றுவதில்லை எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானதாகும். உண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியின பணப்பரிமாற்றம் முழுவதும் கம்பிப் பிணைப்பிடாத பணத்தாள் மூலமே நடைபெறுகிறது. புதிய பணத்தாள் எனக் கூற இயலாத மறுவழங்கலுக்குரிய பணத்தாள்களைக் கூட கம்பிப் பிணைப்பிடாமல் அக்கட்டுகளை தாள் கச்சைகள் மூலம் சுற்றிக் கட்டி இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகப் பிரிவுகள் வழங்குகின்றன. இந்த இன்றியமையாத நடவடிக்கையால் இதர வங்கிகளும் பொதுத்துறை நிறுவனங்களும் இந்த முறைக்ளை முழுவதும் பின்பற்றி அவர்களுடைய செயல்பாடுகளிலும் அரசாங்கர் துறைகளோடும் பொதுமக்களோடும் பறிமாற்றங்கள் நடைபெறுகின்றன. முற்றிலுமாகப் பின்பற்றப்படும், இந்திய ரிசர்வ் வங்கியின் இச்செயல்முறையில் விதிவிலக்குகள் அவசியமில்லை அத்தோடு நண்மை விளைவிக்கக் கூடியதுமல்ல.
அத்தோடு பணத்தாள்களுக்குக் கம்பிப்பிணைப்பிடும் பழக்கத்தை கைவிடவேண்டும் எனும் முடிவை இந்திய அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து 1995 ஆம் ஆண்டே எடுக்கப்பட்டு 1996 முதல் முன்னேற்றப் பாதையில் அச்செயல்பாடு நடக்கிறது. இந்தப் பின்னணியில் சில அரசாங்கத் துறைகள் பாரத ஸ்டேட் வங்கியை பணத்தாள்களை கம்பிப்பிணைப்பிட்டே வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படும் கூற்றை நியாயப்படுத்த முடியாது. வங்கிகளைன் தலைவர்கள் பல கூட்டங்களில் தூய்மையான பணத்தாள் கொள்கையையும் அது தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களையும் முழுமனதோடு ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கியின் கோரிக்கைக்கு ஏற்ப தொடர்புடைய எல்லாத் துறைகளும் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அவற்றை வழி நடத்த வேண்டிய பொறுப்பு, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இதர வங்கிகளுக்கு உண்டும்.
நாடு முழுவதிலுமுள்ள பொதுமக்களின் தேவையப் பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவு புதுப் பணத்தாள்கள் மற்றும் நாணயங்களை வழங்குவதில் இந்திய ரிசர்வ் வங்கி உறிதியோடு செயல்படுகிறது. அத்தோடு இந்திய ரிசர்வ் வங்கியை நவீனப்படுத்தியதின் காரணமாக கடந்த மாதங்களில் 2000 கோடி அளவிற்து பழுதான பணத்தாள்களைப் புழக்கத்திலிருந்து அகற்றியுள்ளது. பணவறை வசதிகளுடைய வங்கிகளோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி பணவழங்கல் தொடர் நடவடிக்கையச் செயல்படுத்துகிறது.
WBSEB,CESC, BSNL போன்ற அரசாங்கம் சார்ந்த / சாராத நிறுவனங்கள் இயன்றளவும் கம்பிப் பிணைப்பிடட பணத்தாள்களையே வங்கிகளில் செலுத்துகின்றன எனும் கூற்றும் உண்மையன்று. ஏனேனில் வங்கிகள் கொண்டியிடாத பணத்தாள்களையே வாங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அரசாங்கத் துறைகளும் ஏனைய CESC போன்ற சேவைநோக்குடைய நிறுவனங்களும் இயன்றளவும் கம்பிப் பிணைப்பிட்ட பணத்தாள்களையே வங்கிகளில் செலுத்துகின்றன எனபதும் உண்மையல்ல. காரணம் வங்கிகள் கம்பிப் பிணைப்பிடப்படாத பணத்தாள்களை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றன. அரசாங்கத்தின் துறைகளும் பொதுப்பயனுடைய CESC போன்ற நிறுவனங்களும் பணம் கையாளும் தங்கள் அலுவலகப் பிரிவுகளை, பணத்தாள் கட்டுகளை குறுக்கு நெடுக்காகத் தாள்களைக் கொண்டு கச்சையிடுவது அல்லது முத்திரையிட்ட பாலித்தீன் உறைகளைப் பயன்படுத்துவது போன்று நவீனாஅக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அது தொடர்பாக கம்பிப் பிணைப்பிடுவதால் தாள்கள் பழுதடைவதோடு அதனுடைய வாழ்நாளும் குறைக்கப்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதோடு பணத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தும் வெள்ளைத்தாள்கள் வெளிநாடுகளிலிருந்து பெரும் செலவில் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். பணத்தாள்களைக் கையாள சிறந்த (அ) உயர்ந்த பாலத்தீன் உறைகளைப் பயன்படுத்தலாம் என்பது வங்கிகளின் விருப்பேற்பும் தெரிந்தெடுக்கும் உரிமையாகும். அதன்வழி பணத்தாள் கட்டுகளை பாதுகாப்போடு கையாள இயலும் இச்செயல்பாடு தாராளமாக அதிகரிக்கப்படவேண்டியதாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தூய்மையான பணத்தாள் கொள்கை பொதுமக்களின் நலனை முந் நிறுத்துவதாகும். பணத்தாள்களைக் கம்பிப் பிணைப்பிடாமல் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் ஏதுவாக CVPS முறைமையில் வழியாக இந்திய ரிசர்வ் வங்கி விரைந்து பணத்தாள் பறிமாற்றச் செயர்பாங்கினைச் செய்கிறது.
அஜித் பிரசாத்
மேலாளர்
செய்தி வெளியீடு 2002-03/1246
வழக்கமான் வங்கி வாடிக்கையாளரை உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறையின (RTGS) எல்லா நலன்களையும் பெற்றவர்களாக மாற்றும் செயற்பாங்கு : ஏனைய வங்கிகளை
இந்திய ரிசர்வ் வங்கி வற்புறுத்துகிறது.
ஜூலை 21,2003
இந்திய ரிசர்வ் வங்கி உதவி ஆளுநர் உயர்திரு வேபா காமேசம் இன்று வங்கிகள் யாவும் அவற்றின் முழுமையான உள்ளமைப்பு வசதிகளையும் பண்ைத ஆதார வளஂக்களையும் இணையீட்டுச் செயல் குறைகளையும் பாதுகாப்பையும் செம்மையாக்கி உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறையின (RTGS) பலன்கள் யாவற்றையும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு வழங்க உறிதியூட்ட வேண்டுமென வற்புறுத்தினார்.
நவீன, ஊக்கமிக்க பாதுகாப்பான பணம் வழங்கல் மற்றும் பரிமாற்றங்களை முடித்துத் தருதல் ஆகிய செயல்பாடுகளை ஒன்றிணைத்து எவரும் மிகக்குறைந்த செலவில் மிகச் சிறந்த சேவை மூலம் அவர் விரும்பும் நபருக்குப் பணம் செலுத்துவதற்கான செயல்முறையை நடைமுறைப் படுத்துகவதே ஒவ்வொரு மத்திய வங்கியின் இன்றியமையா நோக்கங்களுள் ஒன்றென அவர் குறிப்பிட்டார். அன்று இந்திய ரிசர்வ் வங்கியில் நடந்த கூட்டத்தில் தலைமை நிருவாகிகளுடன் உயர்திரு வேபா காமேசம் உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறையைச (RTGS) சிறப்பாகச் செயல்படுத்த வங்கிகளின் தயார்நிலையை மதிப்பிடவே இந்தக் கூட்டம் நடந்தது.
உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமை (RTGS) ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதிக்குள் நடைமுறைப் படுத்துவதற்கு முன்னதாகவே அதற்கு இணையான செயல்முறை நிறுவிச் சோதித்து நடைமுறைப் படுத்தப் பட்டது. உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) காலதாமததிற்கு இடம் தராத வகையில் அடுத்தடுத்து பரிமாற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாக உடனுக்குடன் முடிக்கும் திறனோடு மிக விரைவாக பெருந்தொகைகளை வங்கிகளிடையே வழங்கி அதற்கான முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது. இது செயல்திறனைக் கூடுதலாக்குவதோடு இப்போதுள்ள தீர்வு தொடர்பான இடையூறுகளையும் வெகுவாகக் குறைக்கிறது.
உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமையை (RTGS) அறிமுகப் படுத்துவதற்கு முன்னேற்பாட்டுத் தேவைகள் சிலவுள்ளன. தொழில்கூட விரிவான செய்தித் தொடர்பு வலையமைப்பு உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறையளவு (RTGS) உட்பட வங்கியின் பணம் வழங்கு செயல்பாட்டினை அறிவார்ந்த கட்டுக்கோப்புடன் நடைமுறைப் படுத்த நம்பிக்கைமிக்க விரிவாற்றலுடைய நடைமுறைச் சிறப்புமிக்க கணினிமேடை அமைப்பு மின்னணு முறையில் பணப்பட்டுவாடா மற்ரும் தீர்வுகாணும் முறைமைவு வசதிகள், வங்கிக்குள்ளேயும் வெளிவங்கிகளோடும் தொடர்பு கொள்ள தரப்படுத்தப்பட்ட தகவல் அனுப்பு வடிவளவுகள் பன்னாட்டுத் தரமுடைய பாதுகாப்பு மிக்க தகவல் அனுப்ப செம்மையான முறைமைவு வசதிகள், ஒவ்வொரு உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) பங்கு நபரின் முறையான வணிகரீதியான மறு பொறியமைப்பண்மைத்திறன் அத்தோடு முன்னேறிய கொடுக்கல் வாங்கல் கணக்குகளில் தீர்வுகாணும் தனித்திறன் மேலோண்மை ஆகியன அவற்றுள் அடங்குவன. அநேகமாக இந்த நிபந்தனைகள் யாவும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டவையே என்பது அறியப்பட்டதே.
இச் சூழலில் வங்கியாளர்கள் அந்தக் குறிப்பிட்ட நாளுக்கு SLR பத்திரங்களைத்த் துணிப் பிணையமாகப் பாவித்து இரண்டாம் கடன் சரிப்படுத்து வசதிகொண்ட ஏலம் மூலம் முன் அறிவிப்பின்றி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து பெரும் வரவுத் தொகையை மாற்றித் தருவதற்கான வாய்ப்பின் தேவை குறித்தும் அதற்குச் சிறந்த முறையில் ரொக்கப் பண மேலாண்மையை வங்கிகள் பெற்றிருக்கவேண்டியது அவசியம் என்பதை வங்கியாளர்கள் விவாதித்தனர். அத்தோடு உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமைவு (RTGS) நாட்களுக்கிடையேயான கடன் தீர்க்கும் மேலாண்மை வழியாக கிடைக்கப்பெறும் புது வசதிகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் எனத்த் துணை ஆளுநர் சுட்டிக் காட்டினார். அவரது கூற்றுப்படி, கட்டண அடிப்படியிலான உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) சேவைகளினால் வாடிக்கையாளர்கள் மூலம் வங்கிக்குக் கூடுதல் வருவாய் ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புள. உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமைவை (RTGS) செயல்படுத்துவதால் வணிகர்களுக்குக் ‘மிதப்புப் பணம்’ கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் அதன் காரணமாக அவர்கள் தங்கள் பொருட்களின் விலைக்கட்டமைப்பை மறுபார்வை இடலாம். என அவர் வங்கிகளை எச்சரித்தார்.
உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமைவின (RTGS) முன்னேற்றச் செயல்பாட்டை மசு ஆய்வுக்குட்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி மையப்படுத்தப் பட்ட நிதிமேலாண்மை (மைநிமேமு) முறையமைவைச் செயல்முறைப் படுத்தியதின் விளைவாக நாடங்கிலுமுள்ள 15 இந்திய ரிசர்வ் வங்கி மையங்களின் மூலம் வங்கிகளுக்கு அவர்களது நடப்பு ஒழுங்குதிரண்ட நிதிகளின் நிலைப்பாட்டை உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதி செய்யப் பட்டுள்ளது என்பதை உணை ஆளுநர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் 2003 வாக்கில் மையப்படுத்தப்பட்ட நிதிமேலாண்மை முறையமையின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்குமிடையே நிதி மாற்ரு வசதிகளை ஏற்படுத்தி தரும் என்பதும் அறிவிக்கப்பட்டது. தக்க பாதுகாப்புடன் பன்னாட்டு நிதி மாற்றுமுறையில் பின்பற்றப்படும் தகவல் முறைமைவான SWIFT போன்ற கட்டமைப்பாக சீராக்கப்பட்ட தகவல் பறிமாற்ற முறையமைவை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது.
துணை ஆளுநர், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக் குமிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்ட்து வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் இயைபூக்கிகளாகச் செயல் படவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) வசதிகள் வழக்கமான வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய முழுமையான கட்டுமான அமைப்பு மற்றும் மனிதவள ஆதாரங்கள் ஆகியன தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுருத்தினார். தற்போதைய பண வழங்கல் வழிமுறை காசோலைகள் மற்றும் இதர சாதனங்கள் அடிப்படையில் பற்றுப் பரிமாற்றமுறை அமையவே. ஆனால் உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) மறு தொடர்புணர்வுப் பயிற்சியை எதிர்பார்க்கிறது. என்வே வாடிக்கை யாளர்கள் விபரம் அறிந்தவர்களாக அமையவேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் கிளைகளான 21 மையங்களுக்கும் வணிகரீதியான 126 இதர வங்கிகளின் கிளைகளுக்கும் இடைவே இடையீட்டுச் செயல்பாடு மிக இன்றியமையாதது எனவும் அவர் கூறினார். எனவே உயர்திரு காமேசம் அவர்களது கருத்துப்படி இதன் இறுதி நோக்கம் நகரப்பகுதியில் வாழும் வாடிக்கையாளர்களை மட்டுமல்ல; நாட்டுபுறத்திலுள்ளோரையும் இவ்வசதி சென்றடைய வேண்டும் என்பதே.
அஜித் பிரசாத்
மேலாளர்
செய்தி வெளியீடு 2003-2004/96