திருமதி மாளவிகா சின்ஹா அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமனம் - ஆர்பிஐ - Reserve Bank of India
திருமதி மாளவிகா சின்ஹா அவர்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமனம்
ஏப்ரல் 05, 2017 திருமதி மாளவிகா சின்ஹா அவர்கள் திருமதி மாளவிகா சின்ஹா அவர்களை இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக ரிசர்வ் வங்கி நியமித்தது. திரு. B.P. கனுங்கோ அவர்கள் துணை ஆளுநராக ஏப்ரல் 03, 2017 முதல் நியமிக்கப்பட்டதன் விளைவாக, திருமதி மாளவிகா சின்ஹா அவர்கள் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு ஏப்ரல் 03, 2017-ல் பொறுப்பேற்றார். அந்நியச் செலாவணித் துறை, அரசு வங்கி கணக்குத் துறை, உள்ளகக் கடன் மேலாண்மைத் துறைகளை நிர்வாக இயக்குநர் திருமதி சின்ஹா கண்காணிப்பார். திருமதி மாளவிகா சின்ஹா பொது நிர்வாகத் துறையில் மும்பை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்திய வங்கிகளின் சம்மேளத்தினால் சான்றளிக்கப்பட்ட அங்கத்தினர். தொழில்முறையில் மைய வங்கியிலேயே பணியாற்றிய திருமதி மாளவிகா சின்ஹா அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியில், வங்கிகள் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைத் துறைகளிலும், அந்நியச் செலாவணித் துறையிலும், அரசு மற்றும் வங்கிக் கணக்குத் துறையிலும் பணிபுரிந்தவர். திருமதி மாளவிகா சின்ஹா அவர்கள் நிர்வாக இயக்குநராகப் பதவியேற்கு முன்பு, கூட்டுறவு வங்கி மேற்பார்வைத் துறையில் முதன்மைத் தலைமைப் பொதுமேலாளராகப் பணியாற்றியவர். (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2682 |