இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் உள்ள போலியான இணையதளங்களைப் பற்றி இந்திய ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை
பிப்ரவரி 08, 2018 இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் உள்ள போலியான URL www.indiareserveban.org என்று தெரியாத நபர்களினால் இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டிருப்பது பற்றி இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரியவந்துள்ளது. இந்தப் போலியான இணையதளத்தின் அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் உண்மையான இணையதள அமைப்பைப் போலவே உள்ளது. போலி இணையதளத்தின் முகப்புப் பக்கமும் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் இரகசிய வங்கியியல் விவரங்களை பெற்றுக்கொள்வதற்கான மோசடி நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட "ஆன்லைன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கி சரிபார்ப்பு" வசதியும் ஒரே விதிமுறையுடன் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் மத்திய வங்கியாக இருப்பதால், அது தனிநபர்களுக்கான கணக்குகளை வைத்திருக்கவில்லை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கேட்பதில்லை. இத்தகைய இணையதளங்களில் ஆன்லைனில் பதிலளிக்கும் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது, அவை முக்கியமான தனிப்பட்ட தகவலை துஷ்பிரயோகம் செய்து சமரசம் செய்யவோ , அதன் மூலம் அவை நிதி மற்றும் பிற இழப்புகளுக்கு காரணமாகவோ இருக்கலாம். மேலும், www.rbi.org., www.rbi.in போன்ற இணையதளங்களைப் பற்றியும் இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறது. இந்த URL-கள் ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்திற்கு ஒத்ததாக தோன்றலாம். எனினும், இந்த இணையதளங்களுடன் ரிசர்வ் வங்கிக்கு எந்த தொடர்பும் இல்லை. இத்தகைய இணையதளங்களில் எந்தவொரு தகவலையும் கேட்கும்போதும் அல்லது கொடுக்கும்போதும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். (ஜோஸ் J. காட்டூர்) பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2166
|
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: