போலியான மின்னஞ்சல்கள் குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை - ஆர்பிஐ - Reserve Bank of India
போலியான மின்னஞ்சல்கள் குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
தேதி: ஜூலை 04, 2018 போலியான மின்னஞ்சல்கள் குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி தவறான செயல்பாடுகள் மற்றும் பொது மக்களை மோசடி செய்வது குறித்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. இந்த சக்திகள் ரிசர்வ் வங்கியின் அதிகார பூர்வ கடித வடிவமைப்பை பயன்படுத்துகின்றன. ரிசர்வ் வங்கியின் ஊழியர்களாக ஆள்மாறாட்டம் செய்து மின்னஞ்சல்களை அனுப்புகின்றன மற்றும் போலியான சலுகைகள் / லாட்டரி பரிசுகள் வெளிநாட்டிலிருந்து அந்நிய செலாவணியை/ மலிவானநிதியைஅனுப்புவது போன்றவைகளால் பொது மக்களை கவர்ந்திழுக்கின்றன. நாணய செயலாக்க கட்டணம், அந்நியசெலாவணி நாணய மாற்று கட்டணம், முன்கூட்டியே செலுத்துதல் போன்ற முறைகளில் தங்கள் பணத்தை இழந்து பொது மக்கள் ஏமாறுகிறார்கள். பொது மக்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புதல், வெளிப்புற விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு திரைப்படங்களை ஒளிபரப்புதல் போன்ற பல்வேறு முறைகள் மூலம் போலியான மின்னஞ்சல்கள் குறித்து ரிசர்வ் வங்கி அதன் ‘பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின்’ ஒரு பகுதியாக விழிப்புணர்வை பரப்பி வருகிறது. ரிசர்வ் வங்கி பின்வருவனவற்றை மீண்டும் வலியுறுத்துகிறது:
அத்தகைய நபர்கள் / நிறுவனங்களிடமிருந்து பெறும் தகவல் தொடர்புக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கியின் பெயரில் மோசடி மின்னஞ்சல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜோஸ் ஜே. கட்டூர் பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/34
|