அங்கீகரிக்கப்படாத அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள் குறித்து RBI-ன் எச்சரிக்கை - ஆர்பிஐ - Reserve Bank of India
அங்கீகரிக்கப்படாத அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள் குறித்து RBI-ன் எச்சரிக்கை
பிப்ரவரி 03, 2022 அங்கீகரிக்கப்படாத அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள் குறித்து RBI-ன் எச்சரிக்கை சமூக ஊடகங்கள், தேடுபொறிகள், ஓவர் தி டாப் (OTT) தளங்கள், கேமிங் ஆப்ஸ் மற்றும் பலவற்றில் அங்கீகரிக்கப்படாத மின்னணு வர்த்தக தளங்களில் (ETPs) இந்திய குடியிருப்பாளர்களுக்கு அந்நிய செலாவணி வர்த்தக வசதிகளை வழங்கும் என தவறான விளம்பரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவனத்தை ஈர்த்துள்ளது. அந்நிய செலாவணி வர்த்தகம்/முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்காக அப்பாவி நபர்களை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு, அளவுக்கடந்த/அதிகமான லாபம் குறித்த வாக்குறுதிகளுடன் அவர்களைக் கவர்ந்திழுக்கும் முகவர்களை ஈடுபடுத்தும் இத்தகைய ETPகள் பற்றிய அறிக்கைகளும் உள்ளன. மேலும், இது போன்ற அங்கீகரிக்கப்படாத ETPகள் / போர்டல்கள் மூலம் மோசடிகள் பற்றியும் இத்தகைய வர்த்தகம்/ திட்டங்களின் மூலம் பணத்தை பறிகொடுத்த நிகழ்வுகள் பற்றியும் பல அறிக்கைகள் உள்ளன. அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA)-ன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட நபர்களுடனும் அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே இந்திய குடியிருப்பாளர்கள் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அனுமதிக்கப்பட்ட அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மின்னணு முறையில் செயல்படுத்த கூடினும், ரிசர்வ் வங்கி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளால் (National Stock Exchange of India Ltd., BSE Ltd. மற்றும் Metropolitan Stock Exchange of India Ltd.) அங்கீகரிக்கப்பட்ட ETPகள் மூலம் மட்டுமே RBI அவ்வப்போது குறிப்பிடும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். மார்ஜின் தேவைகளுக்காக வெளிநாட்டு சந்தைகளுக்கு/ வெளிநாட்டு பயனாளிகளுக்கு பணம் அனுப்புதலுக்கு எளிமையாக்கப்பட்ட செலுத்துதல் திட்டத்தின் கீழ் அனுமதி இல்லை என்று தெளிவுபடுத்துகிறது. அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ETPகளின் பட்டியலை RBI-ன் இணையதளத்தில் காணலாம். பொதுமக்களின் வழிகாட்டுதலுக்காக அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் (FAQகள்) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத ETP களில் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு பணம் அனுப்பவோ/சேமிப்பு செய்யவோ வேண்டாம் என RBI பொதுமக்களை எச்சரிக்கிறது. FEMA-ன் கீழ் அனுமதிக்கப்பட்ட பணவர்த்தனைகள் அல்லாத, அல்லது RBI-ஆல் அங்கீகரிக்கப்படாத ETP கள் மூலம் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் குடியிருப்பாளர்கள் மீது FEMA-ன் கீழ் தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். (யோகேஷ் தயாள்) பத்திரிக்கை செய்தி: 2021-2022/1660 |