மெய்ப் பொருள் நிகர் பணத்தை Virtual Currency உபயோகிப்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பிப்ரவரி 01, 2017 மெய்ப் பொருள் நிகர் பணத்தை Virtual Currency மெய்ப் பொருள் நிகர் பணத்தை (Virtual Currency) வைத்திருப்பவர்கள், அவற்றில் வர்த்தகம் செய்பவர்கள் (பிட் (BitCoins) நாணயங்கள் உட்பட) தங்களின் நிதியியல், செயல்முறை, சட்டரீதியான வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சார்ந்த நேரிடர்களை எதிர்பாராத வகையில் சந்திக்கக்கூடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் 24, 2013 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின் மூலம் எச்சரிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி எந்தவொரு அமைப்பு / குழுமம் / நிறுவனத்திற்கு, இத்தகு மெய்ப் பொருள் நிகர் பணம் (பிட்காயின்) வர்த்தகத்தில் / திட்டத்தில் ஈடுபட உரிமமோ அங்கீகாரமோ அளிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆகவே, இதை வைத்திருப்பவர்கள், முதலீடு அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தமது சொந்தப் பொறுப்பிலேயே இவற்றில் ஈடுபடுகின்றனர். (ஜோஸ் J. கட்டூர்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2054 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: