நியாயமான வங்கிக் கட்டணங்களை உருவாக்குவதற்காக ரிசர்வ் வங்கி செயற்குழுவை ஏற்படுத்துகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
நியாயமான வங்கிக் கட்டணங்களை உருவாக்குவதற்காக ரிசர்வ் வங்கி செயற்குழுவை ஏற்படுத்துகிறது
மே 18, 2006
வங்கிக் கட்டணங்களில் நியாயமான அளவை உறுதி செய்யவும் அவற்றை நேர்மையான தொழில் நெறியில் சேர்க்கவும் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு செயற்குழுவை இன்று ஏற்படுத்தியது. நேர்மையான தொழில் நெறி செயல்படுத்தப்படுவதை இந்திய வங்கி விதிகள் மற்றும் மதிப்பு வாரியம் கண்காணிக்கும் செயற்குழுவின் உறுப்பினர்கள் :
1. திரு. என். சதாசிவன், வங்கி ஆம்புட்ஸ்மன், மும்பை – தலைவர்
2. திரு. என். திவாகரா, அகில இந்திய வைப்பாளர் சங்கம்
3. திரு. எச்.என். ஸ்னோர், தலைமைச் செயல் அலுவலர், இந்திய
வங்கிகள் சங்கம்
4. திரு. பி. ஸரன் , தலைமைப் பொது மேலாளர், டி.பி.ஒ.டி.
5. திரு. காஸா சுதாகர், ஸிஜிஎம்., ஆர்.பி.ஸி.டி.
செயற்குழுவின் கவனத்திற்குரியவை:-
தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை வங்கி அல்லது நிதி சேவைகளை கணக்கிடுதல், இந்த திட்டத்தை அவற்றில் அமல் படுத்துதல்.
அத்தகைய சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் போது வங்கிகள் பயன்படுத்தும் அடிப்படை மற்றும் வழி முறைகளை ஆராய்தல், மற்றும் நியாயமானதாகக் கருதப்படும் கொள்கைகளைத் தெளிவுபடுத்துதல்.
இல் கூறப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் சேவைக் கட்டணங்களை உருவாக்குதல் மற்றும் மாற்றுதலுக்கான நியாயமான திட்டத்தை ஏற்படுத்துதல்.
இன் அடிப்படையில் உருவாகும் திட்டத்தில் நேர்மையான தொழில் நெறியின்படி சேர்க்கப்பட வேண்டியவற்றை எடுத்துரைத்தல்.
இந்திய வங்கி விதிகள் மற்றும் மதிப்பு வாரியத்தால் உருவாக்கப்பட்ட நேர்மையான தொழில் நெறியின் பிரிவுகளைச் செயல்படுவதைக் கண்காணிக்க வழிமுறைகளைத் தெரிவித்தல்.
தொடர்புடைய மற்ற விஷயங்கள்.
இந்த செயற்குழு ஜூலை 2006 இறுதிக்குள் தன் அறிக்கையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளால் விதிக்கப்படும் கட்டணங்கள் நியாயத்திற்கு புறம்பாகவும் வெளிப்படையற்றும் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களிலிருந்து இப்போதுள்ள அமைப்பின் குறைபாடு தெரியவந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் 2006-07 ஆண்டிற்கான கொள்கை அறிகையின் 162 ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதை நினைவு கூறலாம். வங்கிக்கட்டணங்களை நியாயமானதாக ஆக்க 36 செயற்குழு உருவாக்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
அல்பனா கில்லாவாலா
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கைக் குறிப்பு : 2005-2006/1490