இந்திய ரிசர்வ் வங்கி புதிய நிதிகளை வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து (NRIs) சில அமைப்புகள் பெறுவதை அனுமதிப்பதில்லை - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி புதிய நிதிகளை வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து (NRIs) சில அமைப்புகள் பெறுவதை அனுமதிப்பதில்லை
ஏப்ரல் 24, 2004
கடல் கடந்த வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து (NRIs) புதியதாக வைப்புக் கணக்குகளுக்குப் பணம் பெறுவதை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் அல்லது வங்கிகள் மட்டுமே அனுமதிக்க முடியும். வேறு அமைப்புகளுக்கு அனுமதியில்லை என இன்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து (NRIs) அவர்களது NRE / FCNR(B) கணக்குகளில் தங்கள் வைப்புகளுக்குரிய தொகையைப் பற்று வைப்பதின் மூலமாகவும் வைப்புக் கணக்குகளை தொடங்க அத்தகைய அமைப்புகளுக்கு அனுமதியில்லை. எனினும் அவ்வமைப்புகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள வைப்புக் கணக்குகளை வைத்துக் கொள்ளவும் அவற்றைப் புதுப்பிக்கவும் முடியும். அத்தகைய கணக்குகள் அவ்வமைப்புகளின் ஆவணங்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பெயர்களில் மாற்றுவதற்குரிய அல்லது மாற்ற இயலாதவைகளாக இருக்கலாம். அத்தகைய வைப்புக் கணக்குகளுக்கு உரிய வட்டியை மாற்றி வழங்கலாம்.
திருத்தி அமைக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன. நடப்பு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டே வெளிநாடுவாழ் இந்தியர்களது வைப்புக்கணக்குகளை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள்/வங்கிகள் மட்டுமே ஏற்க வேண்டும். ஏனைய அமைப்புகளுக்கு அனுமதியில்லை எனும் முடிவு எடுக்கப்பட்டது.
இப்போதுள்ள விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் / வங்கிகள் தவிர, 1956 ஆம் ஆண்டு குழுமங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட குழுமம் (வங்கியல்லாத நிதிக்குழுமம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்து கொண்டது உள்ளிட்ட) அல்லது நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட கூட்டுரிமை அமைப்பும் வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து இடமாற்றத்திற்கு உட்பட்ட வைப்புகளைப் பெறலாம், அவ்வாறிருக்க ஒரு குழுமம் அல்லது தனி உரிமையாளர் நிறுவனம் அல்லது கூட்டுவணிக அமைப்பு ஆகியன இடமாற்றத்திற்கு அனுமதி இல்லாத வைப்புக் கணக்குகளை வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து தொகை பெற்று, தொடங்கலாம். அந்த வைப்புக் கணக்குகளுக்குக் கிடைக்கும் வட்டி நடப்பு வருமானம் எனவே அதற்கு இடமாற்ற அனுமதி உண்டு. அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளை அவர்களது வாடிக்கையாளர்கள் கவனத்திற்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
பி.வி. சதானந்தன
மேலாளர்
பத்திரிகை வெளியீடு 2003-2004/1264