ஆர்பிஐ ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7.30 கோடி பங்களிக்கின்றனர் - ஆர்பிஐ - Reserve Bank of India
ஆர்பிஐ ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7.30 கோடி பங்களிக்கின்றனர்
ஏப்ரல் 28, 2020 ஆர்பிஐ ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7.30 கோடி பங்களிக்கின்றனர் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் சாதாரண பொருளாதார நடவடிக்கைகளில் அதன் தொடர்பான இடப்பெயர்வு, சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளையும் அவர்களின் வாழ்வாதார வழிமுறைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் போல, எந்தவித அவசர அல்லது துயர சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இந்திய அரசு, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (பிஎம் கேர்ஸ் நிதி) என்ற பெயரில் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையை, பல்வேறு துறைககளிலிருந்தும் பங்களிப்புகளைப் பெருவதற்காக அமைத்துள்ளது. இந்த உன்னத காரணத்தை ஆதரிப்பதற்கான அழைப்புக்கு ஒத்துழைக்கின்ற விதமாக ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் சம்பளத்தை பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த பங்களிப்புத் தொகையான ரூ. 7.30 கோடி, பிஎம் கேர்ஸ் நிதிக்கு அனுப்பப்படுகிறது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2283 |