ருபீ கூட்டுறவு வங்கி, பூனாவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்த கட்டுப்பாட்டு உத்தரவுகள் நீட்டிக்கப்படுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
ருபீ கூட்டுறவு வங்கி, பூனாவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்த கட்டுப்பாட்டு உத்தரவுகள் நீட்டிக்கப்படுகிறது
பிப்ரவரி 20, 2017 ருபீ கூட்டுறவு வங்கி, பூனாவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி, ருபீ கூட்டுறவு வங்கி, பூனாவுக்கு பிப்ரவரி 16, 2017 தேதியில் அளித்த உத்தரவின்படி கட்டுப்பாட்டுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு பிப்ரவரி 22, 2017 முதல் ஆகஸ்டு 21, 2017 வரை மறு ஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கின்றது. இந்த கட்டுப்பாட்டு உத்தரவுகள் முதலில், பிப்ரவரி 22, 2013 முதல் ஆகஸ்டு 21, 2013 வரை பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர், ஆறு முறை, ஒவ்வொரு முறையும் ஆறு மாதங்களுக்கும், இரண்டு முறை ஒவ்வொரு முறையும் மூன்று மாதங்களுக்கும் நீட்டித்தது. இறுதியாக, கடந்த ஆகஸ்டு 22, 2016 முதல் பிப்ரவரி 21, 2017 வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 35 A (1) கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த கட்டுப்பாட்டு உத்தரவுகள் வெளியிடப்பட்டன. விருப்பமுள்ள பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் இந்த உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படவேண்டும். இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதக் கூடாது. வங்கியின் நிதிநிலை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வங்கி வர்த்தகத்தை இந்த வங்கி தொடர்ந்து மேற்கொள்ளும். சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொணடுவரக் கருதலாம். (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2245 |