RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78511048

இந்திய ரிசர்வ் வங்கி, பிரம்மவார்ட் வர்த்தக கூட்டுறவு வங்கி லிமிடெட், கான்பூர், உத்தரப்பிரதேசத்திற்கு அளித்த வழிகாட்டுதல் உத்தரவுகளை மார்ச் 06, 2018 வரை நீட்டிக்கிறது

நவம்பர் 06, 2017

இந்திய ரிசர்வ் வங்கி, பிரம்மவார்ட் வர்த்தக கூட்டுறவு வங்கி லிமிடெட்,
கான்பூர், உத்தரப்பிரதேசத்திற்கு அளித்த வழிகாட்டுதல் உத்தரவுகளை
மார்ச் 06, 2018 வரை நீட்டிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, பிரம்மவார்ட் வர்த்தக கூட்டுறவு வங்கி லிமிடெட், கான்பூர், வங்கிக்கு, ஏற்கனவே அளித்த உத்தரவினை நவம்பர் 07, 2017 முதல் மார்ச் 06, 2018 வரை மேலும் நான்கு மாதங்களுக்கு மறு ஆய்வுக்குட்பட்டு நீட்டிக்கிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் விதிக்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் ஜூலை 07, 2015 முதல் இந்த வங்கி இருந்தது. இந்த வழிகாட்டுதல் உத்தரவுகளின் காலம் நவம்பர் 01, 2017 தேதியிட்ட உத்தரவின்படி மார்ச் 06, 2018 வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது. நவம்பர் 01, 2017 தேதியிட்ட உத்தரவின் நகல் பொதுமக்கள் பார்வைக்காக வங்கி வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.

இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி மாற்றங்கள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில்கொண்டு வங்கியின் நிதிநிலை மேம்பட்டதாகவோ அல்லது மோசமடைந்து விட்டதாகவோ கருதக்கூடாது. சூழ்நிலைகளைப் பொறுத்து இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளை மாற்றியமைக்கலாம்.

(அனிருதா D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிகை வெளியீடு – 2017-2018/1251

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?