இந்திய ரிசர்வ் வங்கி, வைஷ் கோ-ஆபரேடிவ் கமர்ஷியல் வங்கி லிமிடெட்,
புதுதில்லிக்கு வழங்கிய உத்தரவுகள் நீட்டிப்பு
மார்ச் 08, 2017 இந்திய ரிசர்வ் வங்கி, வைஷ் கோ-ஆபரேடிவ் கமர்ஷியல் வங்கி லிமிடெட், இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A)(1) மற்றும் (2)-ன்கீழ், வைஷ் கோ-ஆபரேடிவ் கமர்ஷியல் வங்கி லிமிடெட், புதுதில்லிக்கு அளித்திருந்த ஆகஸ்டு 28, 2015 தேதியிட்ட உத்தரவை கடந்த முறை மார்ச் 08, 2017 வரை நீட்டித்திருந்தது. மீண்டும் மறு ஆய்வுக்குட்பட்டு, செப்டம்பர் 08, 2017 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு அதை நீட்டித்துள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு: 2016–2017/2390 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: