இந்திய ரிசர்வ் வங்கி தி வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கி லிமிடெட், புதுதில்லிக்கு ஜனவரி 08, 2018 வரை வழிகாட்டுதல் உத்தரவுகளை நீட்டிக்கிறது
செப்டம்பர் 08, 2017 இந்திய ரிசர்வ் வங்கி தி வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கி லிமிடெட், இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A (1) (பிரிவு 56 உடன் சேர்த்துப் படிக்க)--ன் கீழ் தி வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கி, புதுதில்லிக்கு ஆகஸ்டு 28, 2015 தேதியில் அளித்த உத்தரவில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு அதன் காலம் செப்டம்பர் 08, 2017 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இவ்வங்கி கட்டுப்பாடுகளின் கீழ் மேலும் நான்கு மாதங்களுக்கு வைக்கப்பட்டு, உத்தரவின் காலம் செப்டம்பர் 09, 2017 முதல் ஜனவரி 08, 2018 வரை மறு ஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிகை வெளியீடு – 2017-2018/675 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: