குறைக்கப்பட்ட சந்தை நேரங்களை ஆர்பிஐ தொடர்ந்து நீட்டிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
குறைக்கப்பட்ட சந்தை நேரங்களை ஆர்பிஐ தொடர்ந்து நீட்டிக்கிறது
ஏப்ரல் 30, 2020 குறைக்கப்பட்ட சந்தை நேரங்களை ஆர்பிஐ தொடர்ந்து நீட்டிக்கிறது மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட முறையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கோ வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் அதிகாரிக்கும் சுகாதார அபாயங்கள் ஆகியவற்றினால் தொடர்ச்சியாக்கப்பட்டுள்ள இடப்பெயர்வு கட்டுப்பாடுகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக தொடர்ச்சி திட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால், ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் சந்தைகளுக்கான திருத்தப்பட்ட வர்த்தக நேரம் அதாவது காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, ஏப்ரல் 30, 2020 வியாழக்கிழமை வர்த்தக முடிவு வரை, ஏப்ரல் 16, 2020 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி அமலில் இருந்த நிலையில் மேலும் அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் பொதுமுடக்கம் தொடர்பான உத்தரவுகள் வழங்குவதைப் பொருத்து சந்தை வர்த்தக நேரங்கள் மதிப்பாய்வு செய்யப்படும். யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2297 |