தி இந்தியன் மெர்க்கன்டைல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னௌ, உத்தரப்பிரதேசம் வங்கிக்கு வழிகாட்டுதல் உத்தரவுகளின் கால அளவு நீட்டிக்கப்படுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
தி இந்தியன் மெர்க்கன்டைல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னௌ, உத்தரப்பிரதேசம் வங்கிக்கு வழிகாட்டுதல் உத்தரவுகளின் கால அளவு நீட்டிக்கப்படுகிறது
மார்ச் 09, 2018 தி இந்தியன் மெர்க்கன்டைல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், தி இந்தியன் மெர்க்கன்டைல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், லக்னௌ, உத்தரப்பிரதேசம் வங்கிக்கு, வழிகாட்டுதல் உத்தரவுகளின் கால அளவை மேலும் ஆறு மாதங்களுக்கு மார்ச் 12, 2018 முதல் செப்டம்பர் 11, 2018 வரை நீட்டித்து மறு ஆய்வுக்குட்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, இவ்வங்கிக்கு, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜுன் 04, 2014 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவின்படி, ஜுன் 12, 2014 வரை வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, இவ்வங்கிக்கு, ஜூலை 30, 2014, டிசம்பர் 08, 2014, ஜுன் 02, 2015, செப்டம்பர் 07, 2015, அக்டோபர் 19, 2015, டிசம்பர் 07, 2015, மார்ச் 04, 2016, செப்டம்பர் 02, 2016, நவம்பர் 25, 2016, மார்ச் 09, 2017 மற்றும் செப்டம்பர் 01, 2017 தேதிகளில் வெளியிடப்பட்ட உத்தரவுகளின்படி வழிகாட்டுதல்கள் மாற்றங்கள் செய்யப்பட்டு கால அளவு நீட்டிக்கப்படுகிறது. கடைசியாக மார்ச் 11, 2018 வரை நீட்டித்த கால அளவை நீட்டித்து, மேலும் ஆறு மாதங்களுக்கு மார்ச் 12, 2018 முதல் செப்டம்பர் 11, 2018 வரை மார்ச் 06, 2018 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்தரவின்படி, மறுஆய்விற்கு உட்பட்டு உத்தரவிட்டுள்ளது. மார்ச் 06, 2018 தேதியிடப்பட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள், மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி, இந்த வங்கியின் நிதிநிலைமையில் முன்னேற்றம் கொண்டுவிட்டதாகக் கருதாது. (அனிருத்த D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2411 |