RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78473529

ஸ்ரீ சத்ரபதி நகர கூட்டுறவு வங்கி லிட்., பிம்பில் நிலக் மாவட்டம், புனே, மஹாராஷ்டிராவிற்கு அளிக்கப்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகளை ரிசர்வ் வங்கி மேலும் நீட்டிக்&

செப்டம்பர் 10, 2015

ஸ்ரீ சத்ரபதி நகர கூட்டுறவு வங்கி லிட்., பிம்பில் நிலக் மாவட்டம், புனே, மஹாராஷ்டிராவிற்கு அளிக்கப்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகளை
ரிசர்வ் வங்கி மேலும் நீட்டிக்கிறது

ஸ்ரீ சத்ரபதி நகர கூட்டுறவு வங்கி லிட்., பிம்பில் நிலக் மாவட்டம், புனே, மஹாராஷ்டிராவை  செப்டம்பர் 12, 2014 அலுவல்நேர முடிவிலிருந்து  6 மாதங்களுக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்திட, கட்டுப்பாட்டு உத்தரவு UBD. CO. BSD. 1 NO./3-09/12.22.460/2014-15, செப்டம்பர் 10, 2014, தேதியிட்டதன் மூலம் ஆணை  பிறப்பிக்கப்பட்டது.  மேலே கூறப்பட்ட கட்டுப்பாட்டு  உத்தரவின் மதிப்பு காலம் 2015, மார்ச் 11ம் தேதி அலுவல்நேர முடிவிலிருந்து மேலும் ஆறு மாதங்களுக்கு  2015, மார்ச் 4, தேதியிட்ட சுற்றறிக்கையின் மூலம் நீட்டிக்கப்படுகிறது.  பொதுமக்களுக்கான தகவலாக இதன்மூலம் 10.09.2014 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவை 04.03.2015 தேதியிட்டதோடு சேர்த்துப் படிக்கப்பெற்று அதன் கட்டுப்பாட்டுக் காலம் 10.09.2015 அன்றைய அலுவல் நேர முடிவிலிருந்து, மேலும் மூன்று மாத காலம் 01.09.2015 தேதியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் நீட்டிக்கப்படுகிறது.  இது மறுசீராய்விற்குட்பட்டது.  இதர நிபந்தனைகளிலும் விதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை.  பொதுமக்கள் படித்தறிய, 01.09.2015 தேதியிட்ட சுற்றறிக்கையின்  நகல் வங்கி வளாகத்தில் பார்வையில்படும்படி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட திருத்தத்தை செய்துள்ளது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் நிதிநிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதென, இந்திய ரிசர்வ் வங்கி திருப்தியடைந்துவிட்டதாகக் கருத முடியாது.

அஜித் பிரசாத்
உதவி பொதுமேலாளர்

PRESS RELEASE: 2015-2016/641

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?