பதோஹி அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், பதோஹி மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
பதோஹி அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், பதோஹி மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது
ஏப்ரல் 24, 2017 பதோஹி அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், இந்திய ரிசர்வ் வங்கி, பதோஹி அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், பதோஹி மீது ரூ. 20,000 (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) பண அபராதத்தை விதிக்கிறது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) இல் (மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி) உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பெயரளவில் அங்கத்தினர்களைச் சேர்ப்பது குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் / அறிவுறுத்தல்கள், வெளிப்பாடு நெறிமுறைகள் மற்றும் சட்டபூர்வமான / பிற கட்டுப்பாடுகள், வங்கிகளுக்கிடையேயான மொத்த வெளிப்பாடு குறித்த விவேகவரம்பு (Prudential inter-bank gross exposure Limit) மற்றும் வங்கிகளுக்கிடையேயான நேரெதிர் பொறுப்புக்கான எல்லை வரம்பு, (Inter bank Counter party Limit) உங்கள் வாடிக்கையாளர்களை அறிதல் குறித்த வழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2875 |