RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78505066

இந்திய ரிசர்வ் வங்கி, தி விருத்தாச்சலம் கூட்டுறவு நகர வங்கி
லிமிடெட் (எண் E-81), 64 தெற்குக் கோட்டை வீதி, விருத்தாச்சலம்
கூட்டுறவு நகர வங்கிக்கு அபராதம் விதிக்கிறது

மே 15, 2018

இந்திய ரிசர்வ் வங்கி, தி விருத்தாச்சலம் கூட்டுறவு நகர வங்கி
லிமிடெட் (எண் E-81), 64 தெற்குக் கோட்டை வீதி, விருத்தாச்சலம்
கூட்டுறவு நகர வங்கிக்கு அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, தி விருத்தாச்சலம் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் (எண் E-81), 64 தெற்குக் கோட்டை வீதி, விருத்தாச்சலம்-606001 வங்கிக்கு ரூ. 2.00 லட்சம் (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) பண அபராதத்தை விதித்துள்ளது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46(4) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை மீறி, மேற்படி வங்கி தனது வங்கியின் இயக்குநர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு கடன் வழங்குதல், முன் பணம் வழங்குதலுக்கான கால நீட்டிப்பைத் தடை செய்து, இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட (ஜூலை 1, 2013 தேதியிட்ட முதன்மைச் சுற்றறிக்கை எண் UBD. CO. BPD. MC. No. 8 / 12.05.001 / 2013 - 14-ல் பாரா 5-ல் குறிப்பிடப்பட்ட) வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத காரணத்தால், மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்து மூலம் தனது பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் தனிப்பட்ட பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2998

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?