பத்திரிக்கை வெளியீடு கோகேப்பிட்டல் ஃபைனான்ஸ் லிமிடெட் (GoCapital Finance Limited), சென்னை, தமிழ்நாடு மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
பத்திரிக்கை வெளியீடு கோகேப்பிட்டல் ஃபைனான்ஸ் லிமிடெட் (GoCapital Finance Limited), சென்னை, தமிழ்நாடு மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அக்டோபர் 07, 2024 தேதியிட்ட உத்தரவின் மூலம், கோகேப்பிட்டல் ஃபைனான்ஸ் லிமிடெட் (GoCapital Finance Limited), சென்னை, தமிழ்நாடு நிறுவனத்தின் மீது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 'முதன்மை வழிகாட்டுதல்கள் - இந்திய ரிசர்வ் வங்கி (வங்கி சாரா நிதி நிறுவனம்-அளவுகோல் அடிப்படையிலான ஒழுங்குமுறைகள்) வழிகாட்டுதல்கள், 2023' இன் சில விதிகளுக்கு இணக்கமின்மை காரணமாக ₹1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 58G இன் துணைப்பிரிவு (1) இன் உட்பிரிவு (b) மற்றும் பிரிவு 58B இன் துணைப்பிரிவு (5) இன் உட்பிரிவு (aa) இன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டதாகும். மற்ற விதிமீறல்களுக்கு இடையில், கூடுதல் இயக்குநரின் நியமனம் பற்றிய தகவல் தொடர்பான கடிதங்கள், வங்கி சாரா நிறுவனங்களின் நிர்வாகத்தில் மாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு அந்நிறுவனத்தின் இணங்காமையை வெளிப்படுத்தியது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்ற கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறியதற்காக அந்த நிறுவனத்தின் மீது ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அந்த நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. மேற்கூறிய அறிக்கைக்கான அந்நிறுவனத்தின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது அந்நிறுவனம் கூறிய வாய்வழி சமர்ப்பிப்புகளின் பரிசீலனை மூலம் , ரிசர்வ் வங்கி, மற்ற விதிமீறல்களுக்கு இடையில, அந்நிறுவனம் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் நீடித்திருப்பதைக் கண்டறிந்து, பண அபராதம் விதிக்க உறுதி செய்கிறது. இந்நிறுவனம் தனது நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் விளைவாக 30 சதவீதத்திற்கும் அதிகமான தனது இயக்குநர்களில், சுயாதீன இயக்குநர்களைத் தவிர்த்து, மாற்றத்தை ஏற்படுத்த, முன்னதாகவே ரிசர்வ் வங்கியின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறத் தவறியது . இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, இந்நிறுவனத்திற்கு எதிராக ரிசர்வ் வங்கியால் தொடங்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும். (புனீத் பஞ்சோலி) பத்திரிகை வெளியீடு: 2024-2025/1326 |