இந்திய ரிசர்வ் வங்கி, கார்கோன் நாக்ரிக் சஹகாரி வங்கி மர்யாதித், கார்கோன் மீது பண அபராதத்தை விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி, கார்கோன் நாக்ரிக் சஹகாரி வங்கி மர்யாதித், கார்கோன் மீது பண அபராதத்தை விதிக்கிறது
ஆகஸ்ட் 24, 2015 இந்திய ரிசர்வ் வங்கி, கார்கோன் நாக்ரிக் சஹகாரி வங்கி மர்யாதித், “உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்” (KYC) / கருப்புப் பண ஒழிப்பு (AML) விதிகள் ஆகியவற்றை அமல் படுத்துதல் தொடர்பாகவும், குறித்த நேரத்தில் முறையான அறிக்கைகளை அனுப்புவது மற்றும் நன்கொடைகள் அளிப்பது ஆகியவை குறித்தும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆணைகள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது) பிரிவு 47 A(1)(b) & பிரிவு 46 (4) ஷரத்துகளின் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரங்களின்படி, இந்திய ரிசர்வ் வங்கி, கார்கோன் நாக்ரிக் சஹகாரி வங்கி மர்யாதித், கார்கோன் மீது ரூ.1.00 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) பண அபராதத்தை விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரிய அறிவிப்பை, அந்த வங்கியிடம் வெளியிட்டது. அதற்காக அந்த வங்கி, தனது பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது. சங்கீதா தாஸ் PRESS RELEASE: 2015-2016 / 477 |